நீங்களெல்லாம் பத்திரிகையாளர்களா?
கோவையில் முன்பு ஆய்வு மாணவி ஒருவர் பேராசிரியர் மேல் பாலியல் குற்றசாட்டு கூறினார், அத்தோடு விஷயம் அமுக்கபட்டது
நிர்மலா தேவி மேல் சுமத்தபட்ட குற்றசாட்டும் அதற்கு ஆளுநர் வரை ஓடிவந்து சந்தாணம் கமிட்டி அமைத்ததும் , அந்த அவசர அறிக்கையினை ஆளுநரே வாங்கி லாக்கரில் பூட்டியதும் இன்றுவரை அந்த அறிக்கை வெளிவராததும் எல்லோரும் அறிந்தது
ஆனால் நிர்மலா தேவியினை ஏதோ அகில உலக விபச்சார கும்பலில் தலைவி போல, டாக்டர் பிரகாஷ் மற்றும் அந்த பிரசித்தி பெற்ற கன்னட பிரசாத் அளவுக்கு போட்டு வறுத்தெடுத்தார்கள்
நக்கீரன் பத்திரிகை எல்லாம் அதற்காக பல சிறப்பு இதழ்களை வெளியிட்டது, இன்னும் எல்லா பத்திரிகையும் அள்ளி தெளித்தன ஆர்பரித்தன
ஆனால் சென்னையில் ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் 30க்கும் மேற்பட்ட மாணவியர் ஒரு பேராசிரியர் மேல் குற்றம் சுமத்தினாலும் கண்டுகொள்வார் யாருமில்லை
எவ்வளவு பெரும் கொடுமை இது? ஆய்வு மாணவிகளின் ஆராய்ச்சினை ஆராய வேண்டிய பேராசிரியன் பேராசை மட்டும் மாணவியரையே ஆராய முயன்றிருக்கின்றான்
அதுவும் ஓன்று இரண்டல்ல, 30 மாணவியர்
ஆனால் தமிழகத்தில் சத்தமில்லை, விவகாரம் உச்சநீதிமன்றத்தில் கண்டிப்பான அறிக்கைக்கு பின் விஷயம் வெளிவந்திருக்கின்றது
ஆனாலும் ஒரு சத்தம்? ஒரு சலசலப்பு
நிர்மலாதேவிக்கு ஒரு நியாயம் என்பதும் கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியனுக்கு ஒரு நியாயம் என்பது என்ன சட்டமோ?
விஷயம் ரமணா பட பாணியில் இருக்கின்றது, விஷயத்தை வெளி கொண்டுவர வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் கிறிஸ்தவ கல்லூரிகளில் படித்தவர்களாக இருக்கின்றார்கள்
அதனால் எளிதில் அவர்களை கிறிஸ்தவ கல்லூரி நிறுவணங்களால் அடக்கிவிட முடிகின்றது
என்ன கருமாந்திரமோ தெரியவில்லை
விஷயத்தை முழுக்க ஆராய்ந்தால் கேரள பாவமன்னிப்பு விஷயங்களை விட படுபயங்கர கதைகள் வெளிவரலாம்
சங்கராச்சாரியார் விஷயமென்றால் நிர்மலா தேவி விஷயமென்றால் பிரேமானந்தா, தெய்வ மகன் நித்திசாமி விவகாரம் என்றால் பொங்கி பொங்கி கற்பனை குதிரைக்கு இறகை கட்டி எழுதும் பத்திரிகைகள் கிறிஸ்தவ நிறுவணம் என்றால் அமைதி காப்பது ஏன்?
ஒரு சிறுபான்மை இனத்தின் கொடுமைகளை வெளிகொண்டுவர மாட்டோம் என்பதும், பெரும்பான்மை என்றால் கொக்கரித்து கொண்டாடுவோம் என்பதும் பத்திரிகை தர்மமா?
பொள்ளாச்சி என்றால் பொங்கிய திமுக உட்பட்ட, கனிமொழி உட்டவர்கள் இந்த 30 மாணவியருக்காக வாயே திறக்காதது ஏன்?
அரசியல் கேடுகெட்ட அரசியல்
இந்த பத்திரிகைகள் ஏன் அமைதி? ஏன் இந்த வேடம்?
இவர்களை பார்க்கும்பொழுது அன்று கேப்டன் விஜயகாந்த் சொன்னதுதான் சரி
“த்த்த்த்தூ…. நீங்களெல்லாம் பத்திரிகையாளர்களா?”