மகா தந்திரமான காரியங்களை செய்ய தொடங்கிவிட்டது பாஜக
இப்பொழுதெல்லாம் மகா தந்திரமான காரியங்களை செய்ய தொடங்கிவிட்டது பாஜக
பாபர் மசூதி சிக்கலை பாபரின் வாரிசினை கொண்டே தீர்க்க போகின்றோம் என கிளம்பிவிட்டார்கள்
ஆம் வெள்ளையன் இந்தியா வந்தபொழுது பாபரின் எள்ளு பேரன் பகதூர் ஷா ஆண்டுகொண்டிருந்தார், இந்தியா முழுக்க அவரின் சாம்ராஜ்யமே
ஆற்காடு நவாபும், வங்க நவாப்பும், ஐதரபாத் நிஜாமும் அவனுக்கு கட்டுபட்டவர்கள்
ஆட்டை கடித்து மாட்டை கடித்து ஒவ்வொருவரையாக விரட்டி கடைசியில் பகதூர் ஷாவினையும் விக்ரம் படத்தில் அம்ஜத்கானை சத்யராஜ் தூக்கி கடாசுவது போல் ஷாவினை பர்மாவுக்கு கடத்தி நாட்டை பிடித்தான் பிரிட்டானியன்
அந்த பகதூர்ஷாவின் கல்லறை பர்மாவில்தான் உண்டு
அந்த பகதூர் ஷாவின் வாரிசை இப்பொழுது களமிறக்குகின்றார்கள், அவர் தானாக வந்ததாக சொல்லிகொண்டாலும் அரசியல் புரிந்தோருக்கு உண்மை விளங்கும்
இப்பொழுது பாபரின் வழிதோன்றலும் அந்த பகதூர்ஷாவின் வாரிசுமான ஹாபிபுதின் டுசி என்ன சொல்கின்றார் என்றால் விஷயம் ஒரு மாதிரியானது
அதாவது பாபரின் வாரிசு எனும் முறையில் நானே அந்த நிலத்துக்கு சொந்தக்காரன், அதனால் நானே ராமர்கோவில் கட்ட நிலம் கொடுக்கின்றேன் என கிளம்பிவிட்டார்
மேலோட்டமாக பார்த்தால் அது சரியானது போல் தோன்றலாம்
ஆனால் பலத்த சட்ட சிக்கல் உண்டு, மன்னர்கள் ஒழிக்கபட்டு அவர்கள் சொத்து நாட்டுமை ஆக்கபட்டபின் இதெல்லாம் செல்லுமா என்பது பெரும் கேள்விகுறி
இது சாத்தியமாகும் பட்சத்தில் சில நாயக்கர்கள் திருமலை நாயக்கர் மஹால் என்னது என்றும், சிலர் காந்தி மியூசியம் இருக்கும் மங்கம்மாள் மாளிகை எங்களது என்றும் கிளம்பிவிடுவார்கள்
திருமலை நாயக்கனின் வம்சன் என சொல்லிகொள்ளும் கோஷ்டி அந்த அரண்மனையில் ஒவ்வொரு அறையிலும் வசிக்க ஆரம்பித்தால், அது ஏதோ காலணி போல ஆகிவிடும்
இந்த பாக்தூர் ஷாவின் பேரனின் வருகை நிச்சயம் சரிவராது, அப்படி எல்லாம் எம் முன்னோர் சொத்து என கொடுக்கமுடியாது எனினும் இது சில சர்ச்சைகளை ஏற்படுத்தலாம்
இதெல்லாம் சாத்தியமில்லா விஷயங்கள்
சரி ஒருவாதத்துக்கு இந்த ஹாபிபுதின் டுசி என்பவர் இவ்வளவு நாளும் எங்கிருந்தார்? என்ன பிரியாணியினை வாயில் வைத்திருந்தார் என்பது பற்றிஎல்லாம் நாம் கேட்க கூடாது
எனினும் நாடு முழுக்க எல்லா மசூதிகளும், தேவாலயங்களும் தங்கள் நில பத்திரங்களை சரிபார்ப்பது நல்லது
மதுரை பக்கம் இது சிவபெருமான் திருவிளையாடல் நடத்திய காலத்தில் பாண்டிய மன்னன் ஹேமநாத பாகவதரை வென்ற பாணபுத்திரனுக்கு வழங்கிய நிலத்தின் பத்திரம், அந்த நிலத்தில்தான் மசூதி கோவில் நிலமெல்லாம் கட்டபட்டிருக்கின்றது, நானே அந்த பாணபுத்திரனின் வாரிசு என சிலர் களமிறங்கலாம்
கிட்டதட்ட 600 சமஸ்தானங்களின் வாரிசுகளும் இப்படி களமிறங்கினால் நாடு தாங்குமா?
