உங்களால உலகமே மிரண்டு கிடக்கு
அமெரிக்க சீன வர்த்தக போரால் உலகம் முழுக்க தொழில்துறை பாதிக்கபட்டிருப்பதை உலக நாடுகள் கொஞ்சமும் விரும்பவில்லை
“ஏய் இரண்டு பேரும் சட்டுபுட்டுன்ன்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா, உங்களால உலகமே மிரண்டு கிடக்கு” என கத்த ஆரம்பித்தாயிற்று
இனி இறுதிசுற்று பேச்சு அடுத்த 10 நாட்களுக்கு நடக்கும் என அமெரிக்க சீன தரப்பு சொல்லியிருக்கின்றது
இப்படித்தான் பல இறுதிசுற்று பேச்சு பேசினார்கள், ஒரு முடிவும் எட்டபடவில்லை. இருவருமே விடாகண்டர்கள்
மறுபடியும் பேச வருகின்றார்கள், இம்முறையாவது முடிவு எடுக்கபடுமா இல்லையா என்பதை உலகமே எதிர்பார்க்கின்றது
சீனாவோடு மட்டுமல்ல, ஜப்பான், தென்கொரியா, ஜெர்மன் என எங்கெல்லாம் இரண்டாம் உலகபோருக்கு பின் அமெரிக்கா கொட்டி கொடுத்ததோ அங்கெல்லாம் கை வைப்பதால் உலக தொழில்துறை பெரும் மந்த நிலையினை எட்டியிருக்கின்றது