அண்ணாச்சி இது அவன் டைரக்சனா?

அறை நண்பன் இப்பொழுதெல்லாம் மகா அமைதியாகிவிட்டான், திமுக இன்னும் 10 நாளில் ஆட்சி மாற்றும், 5 நாளில் ஸ்டாலின் முதல்வர் என்பது எல்லாம் நடக்காது என்பது அவனுக்கே தெரிந்துவிட்டது

திமுக என்றொரு கட்சி இருப்பதாகவோ அதற்கு 90க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களும் 23 எம்பிகளும் இருப்பதாகவோ அவன் நினைக்கவே இல்லை, மறந்தே விட்டான்

காஷ்மீர் விவகாரத்தில் முக ஸ்டாலின் சொதப்பி அடித்தது அவனுக்கு பிடிக்கவில்லை, இப்பொழுதெல்லாம் போனில் படம் மட்டும் ஒழுங்காக பார்க்கின்றான்

நேற்று மன்மதன் படம் பார்த்துகொண்டிருந்தான், கிளைமேக்ஸில் ஜோதிகா சொல்லிகொண்டிருந்தார்

“உன்னை கனவுலே பார்த்துட்டேன், அப்பவே என்ன ரேப் பண்ணிட்ட..” என சொல்லும் பொழுது இயர்போனை எடுத்துவிட்டு சத்தமாக சொன்னான்

“அண்ணாச்சி இது அவன் டைரக்சனா?

ஆமாம் சிம்புதான்

பயவுள்ள சினிமாவுல அதிலேயும் கனவு சீன்ல கூட ரேப்தான் பண்ணிருக்கு, வேற எதுவுமே யோசிக்காது போல, வேற எவா இவன் கூட இருப்பா? , பயவுள்ளைக்கு ஒருகாலமும் கல்யாணமே ஆகாது

ஒருத்தன் கனவுல கூடவா ரேப் பண்ணுவான்?”