ஒருநாள் இப்பெண் நிச்சயம் பிரதமராவார்

முத்துலட்சுமி ரெட்டி, ஜெயலலிதா போன்ற வெகுசில தமிழக பெண் அடையாளங்களின் தொடர்ச்சி அவர்

மரகதம் சந்திரசேகர், ஜெயந்தி நடராஜன் போன்ற பலருக்கு வாய்ப்புகள் இருந்தும் காங்கிரஸின் கோஷ்டி பூசல் அவர்களை ஓரத்தில் உட்கார வைத்தது

ஆனால் பாஜக அந்த பெண்மணியினை, தமிழ் பெண்மணியினை உயர வைத்திருக்கின்றது

நிர்மலா சீத்தாராமன், இன்று உலகம் உற்று கவனிக்கும் தமிழ் பெண்மணி

சாதாரண தமிழக‌ குடும்பத்து பெண்மணி இந்தியாவின் உச்சபதவியில் அமர்ந்திருக்கும் பெருமையினை பெண் விடுதலை சொன்ன பெரியாரிய திராவிட கட்சிகள் கொடுக்கவில்லை

பெண் தலமையினை கொண்ட காங்கிரசும் கொடுக்கவில்லை

மாறாக பாஜக கொடுத்திருக்கின்றது, மதவாத கட்சி பிற்போக்கான கட்சி என சொல்லபடும் பாஜகவே அந்த பெருமையினை தமிழ் பெண்மணிக்கு கொடுத்திருக்கின்றது

பிராமணன் என்பதால் கொடுத்தார்கள், தமிழிசைக்கு கொடுத்தார்களா என கேள்விகள் வரும், அப்துல் கலாமினை சாதி பார்த்தா ஜனாதிபதி ஆக்கியது பாஜக?

தமிழிசையினை அமைச்சராக்கினால் பொன்னார் விடுவாரா? வானதிதான் சும்மா விடுவாரா?

அட அந்த பதவியில் வைத்தால் தமிழிசைதான் சும்மா இருப்பாரா?

தகுதியும் திறமையும் கொண்ட நிர்மலா உயர்பதவியினை தன் ஆளுமையால் அடைந்தார், பாஜக மிக சரியான பெண்ணை அடையாளம் கண்டது

கடந்த அரசில் மனோஜ் பாரிகருக்கு பின் அந்த இடத்தை நிரப்ப போவது யார்? என பெரும் கவலை எழுந்த நேரம் நிர்மலா கொண்டுவரபட்டார்

சும்மா சொல்ல கூடாது, சிக்கலான ராஜதந்திரங்கள் நிறைந்த எஸ் 400 சிஸ்டம் எனும் வான் பாதுகாப்பு சாதனத்தை ரஷ்யாவிடம் அவர் பேச்சுநடத்தி கைசாத்திட்ட பொழுது உலகமே உற்று பார்த்தது

அது வெற்றிகரமாக நடந்தபொழுது உலகம் நிர்மலாவினை நோக்கி புன்முறுவல் பூத்தது

தொடர்ந்து அமெரிக்காவுடன் எப் 21 பேச்சு, இன்னும் பல நாடுகளுடன் ராணுவ தேவை ஒப்பந்தம் என அசத்தினார் நிர்மலா

ரபேல் ஊழல் என எதிர்கட்சிகள் கிளப்பிய பெரும் சர்ச்சையினை தனிஆளாக பாராளுமன்றத்தில் மிக உண்மையுடனும் துணிவுடனும் எதிர்கொண்ட நிர்மலா பாஜகவின் தனி தூணாக தெரிந்தார்

ராகுலால் அவரின் வாதத்து முன் நிற்கமுடியவில்லை

முத்தாய்ப்பாக புல்வாமா தாக்குதலும் அதை தொடர்ந்த பாகிஸ்தான் மேலான தாக்குதலிலும் நிர்மலாவின் உறுதியும் புகழும் மேலே மேலே சென்றது

மிக சிறப்பாக தன் பாதுகாப்புதுறை அமைச்சர் பணியினை நிறைவு செய்தார் நிர்மலா

அந்த பெருமையிலும் மகிழ்விலும் அவருக்கு இம்முறை மிக முக்கியமான நிதிதுறை வழங்கபட்டது

இதிலும் அவர் சிக்கலை சந்திக்கின்றார், உலகளாவிய அமெரிக்க சீன மோதல், இன்னபிற சிக்கலில் உலக நாடுகள் பாதிக்கபட்டது போல இந்தியாவும் சிக்கியிருக்கின்றது

அந்த சவாலிலும் நிர்மலா எதிர்கொண்டு வெல்வார் என தேசம் வாழ்த்துகின்றது

பாஜகவின் வருங்கால பிரதமர் முகம் என அறியபடுகின்றார் நிர்மலா, அது சாத்தியமும் கூட‌

வருங்காலத்தில் முதல் தமிழ் பிரதமர் அதுவும் பெண் பிரதமர் எனும் பெரும் அடையாளத்தை அவர்பெற கூடும்

எம்மை பொறுத்தவரை அவரை இரண்டாம் இந்திரா காந்தியாகவே பார்கின்றோம்

நேருவிடம் இந்திரா எப்படி வளர்ந்தாரோ அப்படியே மோடியிடம் வளர்கின்றார் நிர்மலா

மிக துணிவான ஆளுமை, எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும் லாவகம், முகத்தில் எப்பொழுதும் ஒரு உறுதி

கொஞ்சமும் தயக்கமும் தடுமாற்றமுமில்லா பதிலகள், அதே நேரம் தீர்க்கமான உண்மையான பதில்கள் என வலம் வருகின்றார் நிர்மலா

பாதுகாப்புதுறை உட்பட பெரும் பதவியில் இருந்தாலும் கொடிய எதிரியும் அவர்மேல் ஒரு ஊழலோ இல்லை குற்றசாட்டோ கூறமுடியாது

அந்த அளவு நேர்மையினையும் உண்மையினையும் கடைபிடிக்கின்றார்

கொஞ்சமும் படோபகரமான தன்மையோ இல்லை பெரும் அந்தஸ்து கொண்ட உடையோ , பெரும் தலைகணமோ பந்தாவோ அவரிடம் இல்லை

மிக எளிய நூல் சேலையும் ஆடையுமாக சராசரி இந்திய கிராமத்து பெண் போன்ற தோற்றத்தை வழக்கமாக்கியிருக்கின்றார்

அந்த எளிய தோற்றமும் கலைந்த முடியும் அவரின் எளிமைக்கு மிக பெரும் அடையாளம்

ஒரு சில பெண் எம்.எல்.ஏ எம்பிக்களின் அழிச்சாட்டிய ஒப்பனையினை பார்த்து காண சகிக்காத கோலங்களில் நிர்மலாவின் எளிமை வணங்க கூடியது

இந்திராவிடம் இருந்த அதே வசீகரமான எளிமை அது

பாரத பெண்களின் உறுதிக்கும் திறனுக்கும் மாபெரும் அறிவுக்கும் அடையாளமாக பாராளுமன்றத்தில் பெண் சிங்கமாக நிற்கின்றார் நிர்மலா

அவருக்கு இன்று பிறந்தநாள்

கவனியுங்கள், ஒரு தமிழச்சி சுத்தமான தமிழச்சி மாபெரும் உயரம் பெற்றும் இங்கு கவனிக்கமாட்டார்கள், காரணம் பெரியார் வாழ்க என சொல்லாத பெண் இங்கு பெண்ணே அல்ல‌

நிர்மலாவுக்கு தகப்பன் கைதூக்கிவிட்டானா? இல்லை அண்ணனும் தம்பியும் உயர்த்திவிட்டார்களா?

இல்லை, அவரின் கல்வியும் திறமையும் நாட்டுபற்றும் மாபெரும் இடத்தை கொடுத்திருக்கின்றது

பாஜக எனும் கட்சியே அந்த தமிழச்சிக்கு பெரும் கவுரவத்தை கொடுத்திருக்கின்றது

திமுக என்பது கலைஞர் குடும்பத்துக்கும் அவர் குடும்பத்துக்கு வால் பிடிக்கும் குடும்பத்துக்குமே வாய்ப்பு வழங்கும் கட்சி

அதிமுகவில் இனி பெண்கள் எதிர்காலம் சாத்தியமே இல்லை, கதவுகள் மூடபட்டாயிற்று

காங்கிரஸ் எங்கிருக்கின்றது என்றே தெரியவில்லை

பெண்ணுரிமையினை இங்கு ஒழுங்காக காக்கும் கட்சி பாஜக ஒன்றுதான், கட்சியில் மிக சரியாக 33% ஒதுக்கீட்டை அவர்கள்தான் கடைபிடிக்கின்றார்கள்

சாதாரண தமிழச்சியினை அப்படித்தான் கைதூக்கி உயர்பீடத்தில் அமர வைத்திருக்கின்றார்கள், இன்னொரு கட்சியில் இது சாத்தியமா என்றால் சத்தியமாக இல்லை

புறநானூற்று பாடலை சொல்லி பட்ஜெட் வாசித்த அந்த நிர்மலா தமிழரின் வரலாற்றிலும் நின்றுவிட்டார்

எமக்கு முன்பொரு நம்பிக்கை இருந்தது, தமிழரான ப.சிதம்பரம் பிரதமராவார் என்ற நம்பிக்கை இருந்தது, காங்கிரஸின் வீழ்ச்சியில் இனி அதற்கு வாய்ப்பில்லை என ஆயிற்று

தமிழரான ப.சி விட்ட இடத்தை அகில இந்திய அளவில் தமிழச்சியான நிர்மலா மிக உறுதியாக பிடித்துவிட்டதில் அந்த நம்பிக்கை மேலெழுகின்றது

ஒருநாள் இப்பெண் நிச்சயம் பிரதமராவார்

தமிழ்குலத்து பெண் சிங்கத்தை, திருவரங்கத்து திருமகளை, அவ்வையாரும் இந்திராகாந்தியும் கலந்த பெருமகளை அவரின் பிறந்தநாளில் வாழ்த்துவதில் பெருமையடைகின்றோம்

தாயே, இன்னும் பெரும் உயரங்களை நீர் அடைவீராக‌

உம்மால் தமிழகம் பெருமைபடட்டும், தேசம் உயரட்டும்

தேசத்தின் திருமகளாக அகில உலகில் அறியபடும் தங்க மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஆயிரம் பிறை கண்டு சாதனை பல படைக்க நெஞ்சம் நிறைந்த உருக்கமான வாழ்த்துக்கள்

ஒரு இந்திராவினைத்தான் தேசம் இழந்தது, இன்னொரு இந்திரா இதோ வந்தாயிற்று. அவர் விட்டுசென்ற பணிகளை எல்லாம் இனி இவர்தான் தொடர்வார்

இது சத்தியமான வார்த்தைகள், இருந்து பாருங்கள் பொய்க்கவே பொய்க்காது