சீக்கிரம் சண்டை போட்டு ஒரு முடிவோடு வாங்கடா டேய்..
அட அட அட
நிர்மலா சீத்தாராமன் பிராமணர் என்பதால் தமிழர் இல்லையாம்
பாரதியார் உ.வே சாமிநாதய்யர் செய்யாத தமிழ்தொண்டையா மற்ற தமிழர்கள் செய்தார்கள்?
இந்த நாம் தமிழர் தும்பிகள்தான் யார் தமிழர் என ஆய்வு செய்யும், அதை இந்த திமுக இம்சைகளும் ஆரம்பித்துவிட்டன
ஆக திமுக இம்சைகள் முன்னாள் தும்பிகள் போலிருக்கின்றது
இந்நாள் தும்பிகளான நாம் தமிழர் இந்த திமுகவில் பல வந்தேறிகள் உண்டு ஒரு பயலும் தமிழரில்லை என லேப் ரிசல்ட் கொடுத்து கொண்டிருக்கின்றன
ஆனால் திமுக இம்சைகள் நிர்மலா பிராமணத்தி, தமிழர் இல்லை என சர்ட்டிபிக்கேட் கொடுக்கின்றன
கனிமொழி வழக்குக்கு வாதாடிய பிரபல வக்கீல்களும், திமுகவின் ரகசிய ஆடிட்டர்களும் பிராமணர்கள் என்பது வேறு விஷயம்
சரி இப்போதைக்கு யார்தான் தமிழர் என்பதை முன்னாள் தும்பிகளான திமுகவும் இந்நாள் தும்பிகளான நாம் தமிழரும் பெரும் ஆதாரங்களோடு நிரூபிப்பார்கள் என நம்புவோம்
இவனுகளும் இவனுக ஆராய்ச்சியும்…
சீக்கிரம் சண்டை போட்டு ஒரு முடிவோடு வாங்கடா டேய்..