அவனுகளும் அவனுக சுயமரியாதையும்

வெள்ளையன் காலத்தில் அவர்கள் பெயர் சுய மரியாதைக்காரர்கள், நம்மை போன்றவர்கள் பெயர் சுதந்திர போராட்ட தியாகிகள்

சுதந்திர இந்தியாவில் அவர்கள் திராவிடன் நாம் இந்தியர்

பின்பு நேரு காலத்தில் அவர்கள் இனமான தமிழர், நாம் ஆரிய அடிவருடி

இந்திரா காலத்தில் அவர்கள் மானமுள்ள தமிழர்கள், நாம் அடிமை புத்தி கொண்ட கூட்டம்

ஈழசிக்கல் உருவெடுத்த காலத்தில் அவர்கள் வீரதமிழர்கள், நாம் தமிழின துரோகி

இப்பொழுது அவர்கள் திராவிட தமிழர்கள், நாம் சங்கி

ஆக அவர்கள் அதே பிரிவினை சித்தாந்தத்தில் அப்படியே இருக்கின்றார்கள், நாமும் இந்தியனாகவே இருக்கின்றோம்

காலத்துக்கு ஏற்ப நமக்கு புது புது பெயர் சூட்டி மகிழ்கின்றார்கள், அதில் அவர்களுக்கொரு அற்ப சந்தோஷம்..

பதவி என்றவுடன் டெல்லிக்கு ஓடிசெல்லும் அற்ப புத்திக்கு பெயர் தன்மானமாம்

பதவி என்றவுடன் அத்வாணி காலிலும், மந்திரிசபை என்றவுடன் சோனியா காலிலும் விழுந்தவனெல்லாம் எமக்கு வகுப்பெடுக்கின்றான்

அவனுகளும் அவனுக சுயமரியாதையும்

15 வருடம் மத்தியில் இருந்த திமுக என்ன கிழித்தது, தமிழகத்துக்கு என்ன செய்தது என கேட்டால் கலைஞர் டிவியினை ஸ்பெக்ட்ரம் பணத்தில் தொடங்கியது என்பதை தவிர வேறு சாதனை இல்லை

இதே திமுக இன்று மோடி அரசில் பங்கேற்று இருக்குமானால் காஷ்மீராவது மயிராவது என சொல்லி நாட்டுபற்றில் கலந்திருப்பார்கள்

அவனுகளும் அவனுக அரசியலும்.
எம்மை சீண்டாதீர்கள், திமுகவின் ஒவ்வொரு முகமும் எமக்கு அத்துபடி

கலைஞர் என்பவர் மீனுக்கு தூண்டில் போட்ட சாகசக்காரர், சிறு தூண்டிலை வைத்து கொண்டு திமிங்கலத்தையே சரித்தவர் அவர், அவரை ஒரு வில்லனாக ரசிக்கலாம்

ஆனால் உங்கள் ஸ்டாலின் தவளைக்கும் முதலைக்கும் தூண்டில் போட்டுகொண்டிருக்கின்றார், அதை நீங்கள் கைதட்டி ரசிக்கின்றீர்கள்

கொஞ்சமாவது மானமில்லை, வெட்கமில்லை.. நீங்கள் எல்லாம் எம்மை சங்கி என்பதா?

மானங்கெட்ட மானிட ஜென்மம் ஒன்று உண்டென்றால் அது உதயநிதி தலைவனான பின்னும் உதயசூரியன் என சொல்லும் உதவாக்கரை அன்றி எவன்?

உங்கள் தலைவன் சொன்னதுதான், அதை இப்படியும் சொல்லலாம்

நாட்டுக்கும் நாட்டு நலனுக்குமான விஷயங்களை சொல்வதால் எம்மை சங்கி என்பீராயின் அந்த விஷயத்தை ஆயிரம் முறை சொல்வோம்…