ராஜிவின் கனவு நனவாக வேண்டும் என இப்பொழுது நினைப்பவர் யாருமில்லை
சென்னை திருப்பெரும் புதூரில்தான் ராஜிவ் கொல்லபட்டார், அவரின் நினைவிடம் அங்குதான் அமைக்கபட்டிருக்கின்றது
நிச்சயம் காந்தி, இந்திரா கொலைகளுக்கு பின்னர் பரிதாபமானதும் அதே நேரம் கொடூரமானதும் ராஜிவின் மரணம்
நிச்சயம் தமிழக முதல்வர்கள் அங்கு அஞ்சலி செலுத்தத்தான் வேண்டும்
ஆனால் தமிழக முதல்வர்கள் யாராவது சென்றார்களா? என்றால் நிச்சயம் இல்லை
ஏனென்றால் அதுதான் அரசியல் ஜெயாவும் கலைஞரும் அதில் மிக கருத்தாய் இருந்தார்கள்
இப்பொழுது எல்லாம் மாறிவிட்ட காட்சிகள் பழனிச்சாமி அட்டகாசமாக விளைவுகளை பற்றி கவலை இன்றி ஆள்கின்றார்
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினோ நீதி, நேர்மை, நியாயம் என நடக்கின்றார்
இதனால் ராஜிவ் நினைவிடத்திற்கு அவர்கள் வரும் காலம் நெருங்குகின்றது, பார்க்கலாம்
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என விரும்பிய தலைவர் ராஜிவ், 1989ல் அவர் 20 நாட்கள் இங்கு தங்கி இருந்து பிரச்சாரம் செய்தார்
காங்கிரஸ் 25 இடங்களை பிடித்திருந்தது, அதன் பின் ஈழசிக்கலை காட்டி அவரை இங்கு வரவிடாமல் செய்ததில் பலருக்கு பங்கு உண்டு
1991ல் அவர் செத்ததும் அனுதாபத்தில் காங்கிரஸ்தான் தமிழகத்தை ஆண்டிருக்க வேண்டும், ஆனால் விதி அது அல்ல ஜெயாவினை அமர்த்தியது
தமிழகம்பால் ராஜிவ் கொண்டிருந்த அபிமானமும் இங்கு காங்கிரஸ் ஆட்சி வரவேண்டும் என அவர்பட்ட பாடுகளும் கொஞ்சமல்ல
ராஜிவ் மிகபெரும் இந்திய அடையாளமாக அறியபட்ட காலத்தில் அவர் பெயர் இங்கு வளர்ந்துவிட கூடாது என்பதற்காகவே ஈழசிக்கலும் புலி ஆதரவும் அப்படி பெருகின
பின் அது ராஜிவின் உயிருக்கே கேடு ஆயிற்று, காங்கிரஸும் அதன் பின் சவால் எடுக்கவில்லை. மூப்பனாரும் சில வாய்ப்புகளை விட்டுவிட்டார் அல்லது உடனிருந்து கெடுத்தர்கள்
மைனாரிட்டி அரசாக திமுக இருந்தபொழுது காங்கிரஸ் ஆட்சியில் பங்கெடுக்க இளங்கோவன் செய்த முயற்சிகளை அட்டகாசமாக தகர்த்தார் கலைஞர்
ராஜிவின் கனவு நனவாக வேண்டும் என இப்பொழுது நினைப்பவர் யாருமில்லை
எது எப்படி ஆயினும் எங்கள் தலைவி, காங்கிரசை காக்க வந்த காரிகை குஷ்பு இன்று ராஜிவ் நினைவிடத்தில் அஞ்சலி செல்த்தி ராஜிவினை நினைவு கூர்வார் என சங்கம் நம்பிக்கை கொள்கின்றது