காதல் இம்சைகளை இப்படியும் கையாளலாம் போல….
காதல் காமெடி பலவகை ஒவ்வொன்றும் ஒருவகை
அப்படியாக ஆண்டிபட்டியில் நடந்திருக்கின்றது சம்பவம். அவனுக்கு 27 வயது காதலிக்க யாருமே கிடைக்கா சோகத்தில் 16 வயது பள்ளி மாணவியினை சாக்லெட்டோ பொரி உருண்டையோ கொடுத்து சரிகட்டியிருக்கின்றான் அவன்
ஒரு கட்டத்தில் அவளுடன் திருமணம் செய்ய போக பெண்ணுக்கு திருமண வயது வரவில்லை என விரட்டிவிட்டிருக்கின்றார்கள், சுதாரித்த பெண் வீட்டு தரப்பு அவன் முதுகில் 4 சாத்து சாத்திவிட்டு பெண்ணை இழுத்து சென்றார்கள்
17 வயதான நிலையில் அப்பெண் பின்னால் இந்த விதிபடத்து மோகன் போல சுற்றியிருக்கின்றான்
அப்பெண்ணுக்கு இவனை எப்படி பழிவாங்க என தெரியவில்லை, எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லைஇவன்
அவள் எவ்வளவு மறுத்தாலும் கேட்கவில்லை, அதே செத்துவிடுவேன் எனும் மொகாரி ராகம்..
செத்துவிடுவேன் என மிரட்டிய அவனை மிக கச்சிதமாக கையாண்டிருக்கின்றது அப்பெண்
ஆம், நொடிக்கொரு முறை நீ இல்லை என்றால் செத்துவிடுவேன் என மிரட்டியவனிடம் வா நாம் இருவரும் சாகலாம் என சொல்லி வைகை அணைக்கு அழைத்து சென்றிருக்கின்றது
அவனும் திருட்டுபயலே ஜீவன் போல பெரும் கில்லாடியாக இருந்திருக்கின்றான், வீரியம் குறைந்த மருந்தை அதாவது ஆபத்தில்லா கொசுமருந்த்தை வாங்கியிருக்கின்றான்
புன்னகை மன்னன் ஜோடிகள் போல “என்ன சத்தம் இந்த நேரம்..” என அவன் பாடினாலும் அவளோ “வாராய் நீ வாராய், போகுமிடம் வெகு தூரமில்லை..” என சென்றிருக்கின்றாள்
அணையினை அடைந்ததும் வானகமே வையகமே என வசனம் பேசிய அவன் , வழக்கமான டயலக்கான அடுத்த ஜென்மத்தில் சேர்வோம் என சொன்னபடி மருந்தில் கொஞ்சம் குடித்துவிட்டு அவளிடம் கொடுத்திருக்கின்றான்
அவளோ மருந்தா முக்கியம் அணையில் குதிப்பதுதான் முக்கியம் என சொல்லி அவன் கையினை பிடித்தபடி அணைவரை விரைந்திருக்கின்றாள்
இடம் வந்ததும் குதி என சொல்ல்விட்டு அவள் கையினை விட்டுவிட்டு ஓடிவிட்டாள்
அவன் அணைக்குள் கிடந்து கத்தியிருக்கின்றான் அவளோ அவள் போக்கில் சென்று வழியில் சிலரிடம் அந்த அணையில் ஒருத்தன் சாக கிடக்கின்றான் பாவம் , முடிந்தால் காப்பாற்றுங்கள் என சொல்லிவிட்டு வந்துவிட்டாள்
அவனோ கத்தி கத்தி தடுமாறி அங்கே மீன்பிடித்த சிலரின் உதவியுடன் காப்பாற்றபட்டு மருத்துவமனையில் சேர்க்கபட்டிருக்கின்றான்
விஷயம் இரு நாட்களுக்கு முன்பு நடந்திருக்கின்றது, அவன் காப்பாற்றபட்டது தெரியாமல் குடும்பத்தார் உடலை தேடி அது கிடைக்காமல் காரியம் செய்ய தயாராயினர்
அந்த பெண்ணோ அவன் தொலைந்தால் சரி, பிழைத்தாலும் இனி நம்பக்கம் வரவா போகின்றான் என அதன் போக்கில் இருக்கின்றது
அவனோ “மரண பயத்த காட்டிட்டா பரமா” என அலறிகொண்டிருக்கின்றான்
சிலநாட்களில் அவன் வெளிவர கூடும், இனி அந்த பெண் பக்கம் தலை வைத்து படுப்பான்?
ஒருவேளை மறுபடியும் அவளிடம் தேவதாஸ் கோலத்தில் சுற்றினால் அந்த பெண் என்ன சொல்லும்?
“வா கல்யாணம் பண்ணலாம், ஆனா என் கையாலதான் சாப்பிடனும். என்ன பத்தி தெரியும்ல”
இதற்கு மேலும் அவன் அங்கு நிற்பான்?
காதல் இம்சைகளை இப்படியும் கையாளலாம் போல….