எதற்கு ப.சி அஞ்சுகின்றார்?
எதற்கு ப.சி அஞ்சுகின்றார்?
கைதாக வேண்டும், அதன் பின் அவர் அங்கு எப்படி எல்லாம் சித்திரவதை அனுபவிக்கின்றார் என தமிழகத்தில் பத்திரிகைகள் எழுத வேண்டும்
பல அதிர்ச்சி கட்டுரைகள் வரவேண்டும், கடும் வெயிலில் திகாரில் கோவணத்துடன் நிறுத்தபட்டார் ப.சி என்றெல்லாம் செய்திகள் பரபரப்பாக வரவேண்டும்
டிவி விவாதம் எல்லாம் பொங்க வேண்டும், எல்லா பத்திரிகையும் ப.சி பசியில் ப.சி வியாதியில் என எழுதி குவிக்க வேண்டும்
“அப்பச்சி சத்தமா பேசினாலே தாங்க மாட்டாக, அப்பச்சிக்கு வெயில் 1 டிகிரி ஏறினாலும் பைல்ஸ் வந்துரும்ணு பெரியவுக அப்பச்சிய அப்பவே ஸ்விஸ்க்கு அனுப்புனாக” என குடும்பத்தாரும்..
“அவுக லேசா புழுங்குனாலே தாங்க மாட்டாக, திகார்ல கொசு ஒவ்வொண்ணும் நம்ம ஊர் கடம்ப வண்டுமாதிரி இருக்குமாம், அதுல என் ராசா…” என மனைவியும் கதறி அழவேண்டும்
இதை கேட்ட தமிழகம் ஏ அயோக்கிய பாஜகவே என பொங்க வேண்டும்
பின் ஒரு சுபநாளில் ஜாமீன் கொடுப்பார்கள்
அப்பொழுது சென்னை விமான நிலையத்தில் மங்கள இசை, பற இசை முழங்க பெரும் சாதனை செய்துவிட்டு வந்தது போல வரவேற்பு வழங்க வேண்டும்
மனைவி அல்லது மகன் ஓடி சென்று முத்தமிட்டு “அநீதி ஒழிந்தது நீதி வென்றது” என முழங்க வேண்டும்
இது இந்திரா வந்த மண், ராஜிவ் உயிர்விட்ட மண் இங்கு பாஜகவின் பொய்வழக்கு நிற்காது என வசனங்களை அள்ளிவிட வேண்டும்
அதை கேட்ட கூட்டம் ஆர்பரிப்பதில் வங்க கடல் பயந்துவிட வேண்டும்
பின்பு வழக்கை இழு இழு என் இழுக்க வேண்டும் ,சாட்சிகளை கலைக்க வேண்டும், வெறுத்து போய் இருக்கும் நீதிபதியினை பார்த்து டவாலி நமட்டு சிரிப்பு சிரிக்கும் அளவு சம்பவங்களை செய்ய வேண்டும்
அதுதான் அரசியல், அதுதான் தமிழக தர்மம்
இது கூட தெரியாத ப.சியினை வைத்து கொண்டு…..
பிடிச்சு உள்ளே போடுங்க சார், செட்டிக்கு ஒரு அரசியலும் செட் ஆகாது
எவ்வளவு அருமையான வாய்ப்பு, இதை வீணடித்தால் யாருக்கு கோபம் வராது???