ஊழல் வழக்குகளில் சிக்குகின்றானே ஏன்?

தமிழக அரசியல்வாதி எங்கு சென்றாலும் ஊழல் வழக்குகளில் சிக்குகின்றானே ஏன்?

சென்னையில் அதிகாரம் கொடுத்தால் பெங்களூரில் கம்பி எண்ணுகின்றான், டெல்லியில் அதிகாரம் கொடுத்தால் திகாரில் சப்பாத்தி எண்ணுகின்றான் ஏன்?

மற்ற மாநில அரசியல்வாதிகள் இல்லையா? அவர்கள் எல்லாம் அதிகாரத்தில் இல்லையா?

பின் தமிழனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிக்கல்?

சிக்கல் தமிழகத்து தேர்தலில் இருக்கின்றது, தமிழகத்தில் மட்டும்தான் வாக்கின் விலை மிக மிக அதிகம்

பின் அந்த பணத்தை எங்கு சம்பாதிப்பார்கள்? இப்படித்தான்

தமிழக அரசியல்வாதிகள் நல்லவர்கள், அவர்களை பெரும் ஊழல்வாதிகளாக மாற்றியது இந்த தமிழக மக்கள் எனும் அயோக்கியர்கள்

மக்களுக்காக மக்கள் பணத்தை மக்களுக்கு நேரடியாக கொடுக்க சிறை செல்லும் தியாகிகள் தமிழக அரசியல்வாதிகள்

பெரியார் மண்ணுடோவ், அண்ணா கலைஞர் டோவ். புர்ச்சி தலைவன் தலைவி டோவ் என்பதெல்லாம் சும்மா, எல்லாமே பணம்.