கண்ணணின் வாழ்வு

உலகமெல்லாம் மருத்துவம் , உணவு நிபுணர்கள் சொல்லும் விஷயம் வெண்ணெயினை போல உடல்நலமும் மூளை பலமும் கொடுக்கும் விஷயம் எதுவுமில்லை

ஐரோப்பியர் காலை என்றுமே வெண்ணையின்றி விடிவதில்லை, அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்

சமீபத்திய ஆய்வுகளும் உடல் நலத்துக்கு சுத்தமான வெண்ணெய் மகா அவசியம் என அறுதியிட்டு சொல்கின்றன‌

இதை அன்றே சொன்னதுதான் கிருஷ்ண அவதார தத்துவம்

அதன் தொடர்ச்சியே ஆலயம் தோறும் வெண்ணை பாவனையும், வீடு தோறும் அதன் பயன்பாடும்

பகவான் கண்ணனின் தந்திரமும் நகர்வுகளும் மட்டுமல்ல, அவனின் போதனை மட்டுமல்ல, அவனின் உணவும் அதை இந்துக்கள் ஆழமாக கவனித்து பதிய வைத்த நுட்பமும் சாதாரணம் அல்ல‌

மயில் தோகை என்பது நல்ல விஷயம் என்கின்றார்கள்

இன்றும் இஸ்லாமியரின் சில மருத்துவங்களில் மயிலிறகு உண்டு, முகத்தில் அதனால் வருடும் பொழுது மனமும் உடலும் அமைதிபெறும் என்கின்றார்கள்

பல இடங்களில் இதை ஆழகவனித்தால் தெரியும், ஏ.ஆர் ரகுமான் கூட மயிலறகு பிர்யர் என்பார் வாலி

மயிலிறகின் மகத்துவம் பற்றி பெரும் ஆய்வுகள் எல்லாம் உண்டு, இன்றும் தொடர்கின்றது

அக்காலத்தில் இருந்தே அதன் சிறப்பு தனி, முனிவர்களும் ரிஷிகளும் சித்தர்களும் அதன் சிறப்பை மன்னருக்கு உரைத்தார்கள்

இந்துக்கள் வாழ்வில் மயில் தனி இடம் பிடித்தது அப்படித்தான்

அந்த தத்துவத்தை முதன் முதலில் சொன்னவனும் கண்ணனே

ஒன்றா இரண்டா அவன் விட்டுசென்ற விஷயங்கள், அவனின் ஒவ்வொரு அசைவும் அவன் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளும் கூட மாபெரும் மானிட தத்துவங்கள்

இசையின் மகத்துவம் உலகறியும், மெல்லிய இசையின் சக்தி ஆச்சரியங்களை நிகழ்த்தும் என்கின்றது இன்றைய விஞ்ஞான உலகம்

அதை அன்றே செய்தவன் கண்ணன்

இன்று எதெல்லாம் முக்கியம் என உலகம் சொல்கின்றதோ அதை எல்லாம் அன்றே சொல்லிவிட்டு சென்றதுதான் கண்ணணின் வாழ்வு

அவனை கொண்டாடினால், அப்படியே பின்பற்றினால் எல்லா நலமும் வளமும் தானே வரும்