கண்ணனின் லீலைகள்
கண்ணனின் லீலைகள் காமம் சார்ந்தது அல்ல, அவை பக்தியின் உச்சம்
பைபிளில் இந்த யோவான் நற்செய்தி என்பதும் பழைய ஏற்பாட்டில் உன்னத சங்கீதம் என்பதும் புரியா மொழியில் வரும்
அதுவும் உன்னத சங்கீதம் என்பது முழுக்க காமரசம் சொட்டுவது போன்றது என்றாலும் ஆழ கவனித்தால் அது பக்தியின் உச்சம், ஆத்மா பரமாத்மாவினை தேடும் விதம் என்பது புரியும்
ஆன்மீக உச்சநிலையில் அது புரியும்.
கண்ணனுக்கு நிகழ்ந்ததும் அதுவே, கோபியர் அந்நிலையில்தான் கொண்டாடினர்
கிருஷ்ண லீலை என கிளம்பும் கூட்டம், ஒருநாளும் உன்னத சங்கீதம் பற்றி பேசாது
இருக்கட்டும்
அந்த பிரமாஸ்திரம் தாக்கும் பொழுது கற்புள்ள ஒரு ஆண்மகனை மட்டும் அது தீண்டாது என்கின்றது அதற்கான கட்டுப்பாடு
கண்ணனே உள்ளே புகுந்து பரீட்சித்தை காக்கின்றான், ஆம் அவன் கற்புள்ளவனாக இருந்திருக்கின்றான் என்பது அதிலே தெளிவாக தெரிகின்றது
ஆம் நம்பியோருக்கு அவ்வளவு உண்மையாக அவன் இருந்ததாலே பிரம்மாஸ்திரம் அவனுக்கு அடங்கியிருகின்றது
கடவுளின் அவதாரங்கள் மானிட சிறுமூளையினை தாண்டி ஆராய கூடியவை அல்ல, அது முடியவும் முடியாது
அது ஒவ்வொன்றாக உணர்ந்து பார்க்க வேண்டிய விஷயம்,
உணர்ந்து பாருங்கள் உங்கள் உள்ளங்களில் கண்ணன் மாயசிரிப்பு சிரிப்பான்
