அரசியல் அலசல்

உங்களுக்கு அரசியல் அலசல் இருந்தால் இப்பொழுது ஒரு விஷயத்தை சிந்தித்து பாருங்கள்

அப்படி நடந்திருந்தால் இப்பொழுது எப்படி இருக்கும்?

அதாவது ஒருவேளை ஈழம் அமைக்கபட்டு பிரபாகரன் அதன் அதிபராக ஆண்டு கொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

இந்நேரம் தனிநாடு காண‌ காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு என பிரபாகரன் அறிக்கை வாசிப்பார், இந்திய படையின் அட்டகாசத்தை கண்டவர் என்றமுறையில் நான் சொல்கின்றேன் அவர்கள் வெளியேற வேண்டும் என்பார்

இங்கே தமிழ் சிங்கங்கள் சும்மா இருக்குமா?

பெரும் குழப்பமும் சொல்லணா இம்சைகளும் உருவாகும், தமிழகம் இப்படி இராது

பெரும் களபேரமும் ஊர்வலமும் ஆர்பாட்டமும் சொல்லணா குண்டுவெடிப்பும் இன்னும் எதுவெல்லாமோ நிகழும்

வைகோ போன்ற இம்சைகள் சுதந்திர தமிழீழத்தில் அமர்ந்து கொண்டு என்னவெல்லாமோ பேசும்

காஷ்மீரின் அமைதியினை பாகிஸ்தான் கெடுப்பது போல தமிழகத்து அமைதி ஈழத்தால் கெட்டுகொண்டிருக்கும்

இதை எல்லாம் உணர்ந்துதான் அன்றே தனி ஈழத்துக்கு ஆதரவில்லை என துல்லியமாக சொல்லி ராஜிவினை இழந்தாலும் அதில் கருத்தாக இருந்து காத்து நின்றது இந்தியா

சில விஷயங்கள் நிதானமாக காலம் கடந்து யோசித்தால் சில உண்மைகளை சொல்லும்

பல விவகாரங்களை கணித்து ஈழ சிக்கலை நோக்குங்கள், இந்தியா எடுத்தது மிக சரியான நிலைப்பாடு எனபது விளங்கும்

ஈழத்தை கெடுத்தது நிச்சயம் இந்தியா அல்ல, இந்த திமுக திக இன்னும் பல அழிச்சாட்டிய இம்சைகளுக்கு அஞ்சியே இந்தியா தனி ஈழம் எனும் பக்கமே செல்லவில்லை

ஈழத்தை கெடுத்தது சாட்சாத் இவர்களும் இவர்கள் அழிச்சாட்டிய இம்சை அரசியலுமன்றி வேறல்ல‌

அதனால்தான் வங்கதேசத்தை பிரித்த இந்தியா, இலங்கையில் கனத்த மவுனத்தை காத்தது