மனமார நம்புகின்றது பாகிஸ்தான்
திமுக தமிழர்களை காக்குமா இல்லை ஈழதமிழர்களை காக்குமா என்பது தெரியாது ஆனால் பாகிஸ்தானியரை நிச்சயம் காக்கும் என மனமார நம்புகின்றது பாகிஸ்தான்
டெல்லியில் காஷ்மீருக்கு 370ம் சட்டபிரிவினை நீக்கியதை கண்டித்து இந்தியாவில் திமுக குரல் எழுப்புவதையும் உச்சமாக டெல்லியில் அது போராட வருவதை கண்டு துள்ளி எழுந்தது பாகிஸ்தான்
அட நாமும் 370ம் பிரிவினை நீக்க கூடாது என்கின்றோம், திமுகவும் அதையே சொல்லி நண்பனாகிவிட்டது என குஷியான பாகிஸ்தான் யார் ஸ்டாலின்? கலைஞர் யார்? அண்ணா யார்? முத்துவேலர் யார்? அஞ்சுகம்மாள் யார்? கோபாலபுரம் எங்கிருக்கின்றது என விசாரிக்க ஆரம்பித்துவிட்டன
விரைவில் லாகூரில் அறிவாலயம் திறந்தாலும் திறக்கலாம் , திமுகவினரை ஐ.நா சபை , லண்டன், நியூ யார்க், பிஜீங் என பல இடங்களில் பேசவைக்கும் திட்டம் கூட அவர்களுக்கு வந்திருக்கும் போல..
இன்று திமுக ஆர்ப்பாட்டம் தொடங்கியது இதோ இந்தியாவில் நமக்காக போராடும் நம் சகோதரர்களை பாரீர் என்ற அளவில் பாகிஸ்தானின் கொண்டாட்டம் இருந்தது
வழக்கமாக “ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே நாங்கள் நினைத்தால் அமெரிக்கா இருக்காது, ஏ ரஷ்ய ஏகாதிபத்தியமே நாங்கள் தும்மினால் மாஸ்கோ நொறுங்கும்..” என சவுடால் விட்டே வளர்ந்த கட்சி திமுக என்பதால் அது முதலில் கண்டுகொள்ளவில்லை
ஆனால் இந்திய தரப்புக்கு இதெல்லாம் சரியாக படவில்லை என்றதும் பாகிஸ்தான் கொடுத்த அதீத கவனமும் திமுகவுக்கு சிக்கலை கொடுத்திருகின்றன
“அய்யய்யோ சங்கத்தை உடனே கலைங்கடா..” என வடிவேலு ஸ்டைலில் போராட்டத்தை முடித்த திமுக, பங்கேற்ற அனைவருக்கும் நன்றி நன்றி என சொல்லிவிட்டு ஓடுகின்றது
எனினும் சட்டசிக்கலை தவிர்க்க, நாம் 370 பிரிவினை நீக்கியதை கண்டிக்கவில்லை மாறாக வீட்டுகாவலில் வைக்கபட்டிருக்கும் தலைவர்களுக்கு ஆதரவாக மட்டுமே ஆர்பாட்டம் நடத்தினோம் என சொல்லிகொண்டிருக்கின்றது
370ம் பிரிவு நீக்கம் ஜனநாயக படுகொலை என சொன்ன கட்சி திமுக என்பதும், அதன் தொடர்ச்சியாக போராட்டம் என அறிவித்ததும் எல்லாம் ஆவணமாக உள்ள நிலையில் திமுக எப்படி தப்புமோ தெரியாது
பிள்ளையாரை பிடிக்க போய்.. இல்லை அவர்கள் பகுத்தறிவாளர்கள்
அண்ணாவினை பிடிக்க போய் நெடுஞ்செழியனாய் முடிந்த கதையாக திடீர் திருப்பத்தை எதிர்பாராமல் ஓடி திகைக்கின்றது திமுக
ஆனால் பாகிஸ்தானோ எம் திமுக சகோதரர்கள் என்ற வகையில் மகா மகிழ்ச்சியாக உறுதியாக இருக்கின்றது
திமுகவுக்கு ஒருவேளை சிக்கல் வந்தால் யார் காப்பாற்றுவார்?
அவர்களுக்கா ஆளில்லை, தமிழக முதல்வரே அவர்களின் அனுசரணையில்தானே ஆட்சியில் இருக்கின்றார்
தன் ஆட்சி நீட்டிக்க முழு ஒத்துழைப்பையும் வழங்கும் திமுகவுக்கு அவர் இந்த உதவி கூட செய்யமாட்டாரா என்ன?
“அமித்ஷாஜி, ஸ்டாலின் நம்ம ஆளு , சும்மா காமெடி பண்ணுனாரு வேற ஒண்ணுமில்ல..” என பழனிச்சாமி சொல்லிவிட்டால் அமித்ஷா தட்டிவிடுவாரா என்ன?