86 வயது ஸ்பெயின் மிஷனரி ஒருவரை இந்தியா விசா நீட்டிப்பு இன்றி வெளியேற்றிவிட்டது
ஒரு செய்தி பரவுகின்றது, 86 வயது ஸ்பெயின் மிஷனரி ஒருவரை இந்தியா விசா நீட்டிப்பு இன்றி வெளியேற்றிவிட்டது, இது கிறிஸ்தவருக்கு எதிரான அநீதி மோடி தூய இந்து இந்தியாவினை அமைக்க ஆரம்பித்துவிட்டார் என பல குரல்கள்
குறிப்பாக கிறிஸ்தவ குரல்கள், அதற்கு தோதாக இஸ்லாமிய சத்தங்கள்
உண்மையில் கடந்த இரு ஆண்டுக்கு முன்பே இங்கு குடியுரிமை சட்டத்திலும் விசா கொடுப்பதிலும் கடும் கட்டுபாடுகள் விதிக்கபட்டன
நம்புகின்றீர்களோ இல்லையோ இம்மாதிரி சட்டங்கள் வந்தபின் பல திடீர் குண்டுவெடிப்பு, கலவரம் இன்னும் பல விஷயங்கள் கட்டுபடுத்தபட்டன
ஆக அரசிடமும் ஏதோ கணக்கு சரியாக இருந்திருக்கின்றது
முன்பெல்லாம் இந்தியா வம்சாவளி என்றாலே 15 வருட விசா, தொண்டு நிறுவணம் கல்வி வழி வரவு என்றால் ஆயுளுக்கும் விசா என ஏக தளர்வுகள் இருந்தன
இது பெரும் சிக்கலை கொண்டுவந்தது
வெளிநாட்டு உளவு பிரிவுகளும் இன்னும் பலரும் பலவழிகளில் இங்கு ஊடுருவி பெரும் குழப்பத்தை விளைவித்தனர்
எல்லா மிஷினரிகளையும் அப்படி சொல்லமுடியாது, எல்லா குடியேறிகளையும் அப்படி சொல்லமுடியாது எனினும் ஒரு துளி விஷம் ஒரு குடம் பாலை கெடுத்துவிடும்
பணத்தின் மூலம் வெளிநாடாய் இருக்கும் பொழுது அவர்களுக்கு இங்கு என்னவேலை என்பதில் ஆயிரம் சந்தேகங்கள் முளைத்தன
எல்லா தொண்டு நிறுவணங்களையும் நம்ப முடியாது, ஆனான பட்ட பின்லேடனை அமெரிக்காவில் அடையாளம் கண்டு போட்டு கொடுத்ததே தொண்டு நிறுவணம்தான்
ஆம் எங்கெல்லாம் வாய்ப்பு உண்டோ அங்கெல்லாம் உளவு சக்திகள் நுழையும்
இந்தியா இதற்காக கடந்த வருடமே சட்டத்தை இறுக்கியது.
எம் நேரடி அனுபவத்தை சொல்கின்றோம், இந்திய பெண்ணை மணந்து, இந்தியாவிலே தங்கிவிட்ட 90 வயது முதியவருக்கே விசா இல்லை என்றார்கள்
மனிதாபிமான அடிப்படையில் கேட்டாலும் காவல்துறை, ராணுவம், இன்னும் சில துறைகளில் இருந்த வெளிநாட்டவருக்கு இங்கு விசா நீட்டிப்பு இல்லை என கையினை விரித்துவிட்டார்கள்
இவ்வளவுக்கும் அவர்களின் பிள்ளைகள் இந்திய குடியுரிமை பெற்றவர்கள், எவ்வளவோ மோதிபார்த்தும் பலன் இல்லை
இது அரசின் முடிவு
அது எல்லா வெளிநாட்டினருக்கும் சமம்
எவனாவது அய்யகோ கிறிஸ்தவனை குறிவைத்து அடிக்கின்றான் என புரளியினை கிளப்பினால் நம்பாதீர்கள்
இதில் மிஷனரி, மதம், இனம் என எந்த வேறுபாடுமில்லை. அரசு விதித்திருக்கும் சட்டத்திற்கு பொருந்தாத யாரும் வெளியேற வேண்டியதுதான்