அப்படி ஒரு போராட்டம் நடந்ததா?
அப்படி ஒரு போராட்டம் நடந்ததா? என தெரியாமலே முடிந்துவிட்டது திமுகவின் டெல்லி போராட்டம்
முன்பொருமுறை கலைஞரை குடியரசு தலைவராக அமர சொல்லி வற்புறுத்தல் இந்தியா முழுக்க இருந்து வந்தது
என் உயரம் எனக்கு தெரியும்,டெல்லி நம் எல்லைக்கு அப்பாற்பட்டது என சொல்லி மறுத்து மிக அழகாக அரசியலை தொடர்ந்து வரலாறாக மாறினார் அவர்
அவர் நினைத்திருந்தால் நொடியில் குடியரசு தலைவராகியிருக்கலாம் ஆனால் அதன் பின்னால் நடக்க போகும் விளைவுகளை கணித்து அட்டகாசமாக அதை தவிர்த்தார்
இந்த திமுக டெல்லியில் இவர்களுக்கு யார் இருக்கின்றார்கள்? எந்த தொண்டர்படை இருக்கின்றார்கள் என கிளம்பினார்களோ தெரியாது, டெல்லி முழுக்க பொங்கும் என யாரோ தவறாக வழிநடத்தியிருக்கின்றார்கள்
தலமையும் சிக்கி வீழ்ந்து கிடக்கின்றது
போராடுவதாக இருந்தால் தமிழகத்தில் பெரும் ஆர்ப்பாட்டம் பேரணி என நடத்தியிருக்கலாம், திமுகவின் குகை இதுதான்
அதைவிடுத்து எங்கோ சென்று உறுமினால் இப்படித்தான் ஆகும்
மிக மிக தவறானவர்களால் இம்சை அரசன் நாசர்போல யாரோ திமுக தலமையினை தவறாக வழிநடத்துகின்றார்கள், தலமையும் மந்திரித்துவிட்ட ஆடு போல பின் செல்கின்றது
இனி ஒரு சுபநாளில் ஹலால் முறைபடியோ இல்லை ஒரே போடாகவோ போட்டு முடித்துவிடுவார்கள்