NIA சட்டம் எல்லாம் திருத்திட்டானுக
இனி ஈழம், தனிநாடு, பிரபாகரன், தமிழ்தேசியம் எல்லாம் பேசமுடியாது NIA சட்டம் எல்லாம் திருத்திட்டானுக
ப.சிதம்பரமே இந்தபாடுபடுறார்ன்னா நம்ம நிலை நினைச்சாலே பயமா இருக்கு..
காஷ்மீர்ல நடக்குறத பார்த்தா நமக்கே கால் எல்லாம் ஆடுது,இதெல்லாம் எவனால தாக்குபிடிக்க முடியும்? ஆத்தாடி, மனுஷனுகளா அவனுக?
சோனியாவும், அய்யா கலைஞரும் எவ்வளவு நல்லவுகன்னு இப்பதான் புரியுது

ஏதாவது செய்யணும், இல்லண்ணா தம்பிக மறந்துருவானுக, அண்ணே நீ உயிரோடத்தான் இருக்கியா? இல்ல வீர அஞ்சலி கூட்டம் நடத்தட்டுமான்னு கேட்ருவானுக.
பால் விலை கூடி போச்சி, கோகுலாஷ்டமி வேற வந்தாச்சி, அவுகளுக்கு வேற பசுமாடுன்னா ரொம்ப பிடிக்கும்
“கடவுள் கிருஷ்ணனே மேய்ச்ச பசுமாட்டை நானும் நீயும் மேய்த்தால் என்னடா? ஒழுங்கா மேய்ச்சோம்னு வச்சிக்க, அரேபியாவுக்கு பால கொடுத்துட்டு அதுக்கு பதிலா பெட்ரோல் வாங்கிக்கலாம் ” என கிளம்பிற வேண்டியதுதான்