தமிழக அரசியலிலும் அப்படி ஒரு கண்ணன் இருந்தார்
நமக்கு ஆன்மீக கண்ணனை தெரியும், தமிழக அரசியலிலும் அப்படி ஒரு கண்ணன் இருந்தார்
மகா தந்திரகாரன் அவர், கம்சனை ஒழித்தாரோ இல்லையோ கம்சன் போல இங்கிருந்த பெரியாருக்கு பெப்பே காட்டிவிட்டு ஒரு தர்மனோடு ஓடிவந்தார்
ஆம் அண்ணா அண்ணா என அவரோடே இருந்தார்,
அங்கே கண்ணனும் பலராமனும் என்றால் இங்கு கலைஞரும் அண்ணாவும்
மகா ஆச்சரியமாக இந்த கண்ணனுக்கும் ஒரு அர்ஜூனன் கிடைத்தான் அவன் பெயர் ராமசந்திரன்,
அர்ஜூனனுக்கு காண்டீபம் போல ராமசந்திரனுக்கு மேக் அப் இருந்தது
கண்ணன் சொல்ல சொல்ல அர்ஜூனன் அம்பு எறிவது போல கலைஞர் சொல்ல சொல்ல ராமசந்திரன் சினிமாவில் டயலாக் பேசிகொண்டிருந்தார்
அவனை வைத்தே திராவிட போர் தொடுத்தார்கள், அப்பக்கம் பீஷ்மராக காமராஜர் கர்ணனாக மூப்பனார் என இன்னும் பலர் இருந்தாலும் நம்ம கண்ணனின் தந்திரம் முன்னால் அவர்களால் நிற்க முடியவில்லை
மகா ஆச்சரியமாக திராவிட போரில் மாபெரும் வெற்றிபெற்றார் நம் கண்ணன்
அத்தோடு முடியவில்லை திராவிட பாரதம் அதற்கு பின்புதான் தொடங்கியது
அர்ஜூனனுக்கும் கண்ணனுக்கும் முட்டிகொண்டது, நான் யாரென காட்டுகின்றேன் என கிளம்பிசென்று வித்தை காட்டிய அர்ஜூனன்முன்னால் நம் கண்ணணால் நிற்க முடியவிலை
ஆயினும் நம் கண்ணன் அட்டகாசமாக சித்துவிளையாட்டுக்களை ஆடினார், ஆட்டம் என்றால் மகா கடுமையான ஆட்டம், அர்ஜூனனுக்கே வேர்த்து கொட்டிற்று

(அதிலும் ஏகபட்ட தந்திரம் சாகசம், மாய வேலைகள் ஏராளம் நம் கண்ணனுக்கும் ஒரு குசேலன் உண்டு அவர்பெயர் அன்பழகன், கடைசி வரை இவர் அவருக்கு அவல் மட்டும் கொடுத்தார்)

அர்ஜூனன் ஒருவழியாக வைகுண்டம் போனாலும் அல்லிராணி அர்ஜூணனின் வாரிசாக வந்தாள், நம் கண்ணன் 3ம் இன்னிங்ஸை ஆடினார்
அதில் அர்ஜூனன் அபிமன்புயினை இழந்தது போலவே முரசொலிமாறன் எனும் தன் வாரிசை இழந்து தவித்தார் நம்ம கண்ணன்
நினைத்தால் அல்லிராணியினை நம் கண்ணன் நொறுக்கி தள்ளியிருக்கலாம் ஆனால் அந்த பீஷ்மர் காமராஜரின் சாபமோ இல்லை பிள்ளைகளை பறிகொடுத்த காந்தாரி இந்திராவின் சாபமோ நம் கண்ணனையும் தாக்கிற்று
ஆம் தன் வாரிசுகள் தனக்கு முன்னால் சண்டையிட்டு அழிவதை கண்டே கண்ணன் மனமுடைந்து செத்தது போல, நம்ம கண்ணனும் கடைசி காலங்களில் நிம்மதியின்றி செத்து போனார்
ஆனால் கண்ணனை போலவே சிறுவயதிலிருந்து பல ஆபத்துக்களை கடந்து முதல் பெரும் அரக்கிகளை சந்தித்து தப்பியது முதல் வீழ்த்தமுடியா பெரும் பிம்பங்களை வீழ்த்திகாட்டியது வரை பகவான் கண்ணனுக்கும் நம் கண்ணனுக்கும் ஒற்றுமைஅதிகம்
மனைவியர் கணக்கு கூட சரியாக வரும், அட அவருக்கு துவாரகா என்றால் இவருக்கு சமத்துவபுரம்
இன்னும் நிறைய கவனியுங்கள், இருவருக்குமான ஒற்றுமை மிக மிக அதிகம்
மகா அபூர்வமான ஒற்றுமை அது
அவர் ஆயர்பாடி எனும் அன்றைய தலித், இவர் இன்றைய தலித்
அவர் கங்கை கரை, இவர் காவேரி கரை
அங்கே கம்சன் , இங்கே இவருக்கு பார்பானிய காங்கிரஸ்
இருவர் மேலும் ஏகபட்ட கொலை முயற்சிகள்.
இருவருமே இன்றைய டெல்லியும் அன்றைய அஸ்தினாபுரமுமான அந்த அதிகார பீடத்து ஆட்சியினை நிர்மானிப்பவர்களாக இருந்தார்கள்
இன்னமும் நிறைய உண்டு
குறிப்பாக தன்னிடம் வந்தவர்களை எல்லாம் கைதூக்கி மேலேற்றிவிட்டான் கண்ணன், கலைஞரிடமும் அது இருந்தது
கண்ணன் காலத்தில் அவனே வெற்றி தோல்வியினை நிர்ணயிபபவானக் இருந்தான், கலைஞரும் அவர் வாழுமட்டும் அப்படித்தான் இருந்தார்
உறவுகளும் வளர்த்தோரும் நன்றிமறந்த கதை அங்கும் உண்டு, இங்கும் உண்டு
அவர் கையில் சக்கரம், இவர் கையில் பேனா.
அங்கு சங்கொலி, இங்கு முரசொலி
இருவருமே முடி சூடி இருந்தார்கள், இருவருக்குமே நண்பர்களும் உறவுகளும் ஏராளம்
இருவருக்குமுள்ள பெரும் ஒற்றுமை இவர்களை எதிர்த்தவர்கள் நெடுநாள் வாழ்வதில்லை
கண்ணனுக்கும் அப்படியே, கலைஞருக்கும் அப்படியே தன்னை எதிர்த்தவர் மரணத்தை எல்லாம் பார்த்துவிட்டுத்தான் மறைந்தார் கலைஞர்
இருவருமே சோகத்தை பலமுறை கடந்தவர்கள், இருவருமே எல்லா சூழலையும் சிரித்துகொண்டே கடந்தவர்கள்
கலைஞர் மேல் பல சர்ச்சைகள் இருக்கலாம், ஆனால் நம் கண்முன் கண்ட மாபெரும் தந்திர சாகச அறிவாளி அவர்
கண்ணனின் சாயல் சில துளிகளாக அவரிலும் இருந்தது, அது அவர் நம்பாத கடவுளின் அருளாக இருக்கலாம்
கலைஞர் வாழ்ந்ததும் மறைந்ததும் கோபாலபுரம்..
ஜாதகபிரகாரம் கூட இருவருக்கும் ஒரே ராசி என்பார்கள், அதைபற்றி துர்கா ஸ்டாலினிடம் பின்னர் ஒரு நாள் விசாரிக்க வேண்டும்