முதிர்ச்சியான அரசியல்
ஈழபிரச்சினை உச்சத்தில் , ஜெயா ஏதோ சொல்ல போக பெரும் சலசலப்பினை இங்கு ஏற்படுத்திற்று
சிங்கள அரசியல்வாதி எவனோ ஜெயாவினை மட்டமாக பேசிவிட்டான், தமிழக அரசியலுக்காக ஜெயா இலங்கை பிரச்சினையில் தலையிடுவதாக அப்படி சொல்லியிருந்தான் அவன்
ஜெயாவின் பரம எதிரியான கலைஞர் சீறிகொண்டு பதிலளித்தார்
“இது எங்கள் மாநிலம் இந்நாட்டு சிக்கல், இன்னொருவர் எம்மை சேர்ந்தவரை பற்றி பேசவோ, கருத்து சொல்லவோ அவசியமுமில்லை தேவையுமில்லை
ஈழமக்களை சரிக்கு சமமாக நடத்தி உரிமைகளை கொடுத்திருந்தால் நாங்கள் ஏன் இலங்கையில் தலையிட போகின்றோம்? அவர்கள் சிக்கலில் நாங்கள் பேசாமல் யார் பேசுவார்கள்?
அம்மையார் ஜெயலலிதாவினை பற்றி சிங்கள எம்பி பேசியிருப்பதை கண்டிக்கின்றேன். எங்கள் சிக்கலை நாங்கள் பார்த்து கொள்கின்றோம்”
தேர்ந்த அரசியல் என்பது இதுதான், முதிர்ச்சியான அரசியல் என்பது இதுதான்
ஆனால் இன்னமும் பாகிஸ்தானை கண்டிக்காத முக ஸ்டாலினை எண்ணி வாயில் துண்டை வைத்து மவுனமாக அழுதுகொண்டிருகின்றான் உண்மையான திமுக தொண்டன்