சேர்ந்து கைகோர்த்து நாட்டை மீட்பதே சரி

அது 1970களின் காலம், இந்திரா ஆண்டுகொண்டிருந்தார்

இந்தியாவினை குறிவைத்து அடித்தது அமெரிக்கா. கடும் பொருளாதார நெருக்கடியினை கொடுத்தது

இந்திரா அமெரிக்க நெருக்கடிக்கு பணிந்தார், டாலருக்கு நிகரான மதிப்பை குறைத்தார்

சட்டென உயரதொடங்கியது விலைவாசி, அன்றைய நிலையில் அவருக்கு வேறு தெரிவு இல்லை

ராஜிவ் காலத்திலும் இதே சிக்கலை கொடுத்தார்கள், ராஜிவ் அன்றைய சோவியத்துடன் ஏதோ செய்ய முயன்றார், சோவியத்தின் அந்திமகாலத்தில் அதுவும் உடைந்து முயற்சி தோல்வியில் முடிந்தது

இங்கு ஒரு துருவ தலமை வரும்பொழுதெல்லாம் காட்சிகள் இப்படி வரும், மோடிக்கும் அதே சிக்கல்

மோடி முன்னால் உள்ள தெரிவு இரண்டு

ஒன்று உபரிநிதியினை எடுத்தல் அல்லது டாலருக்கு நிகரான பணத்தை இன்னும் குறைத்தல், பிந்தையது ஆபத்தானது

ஏன் ஆயிற்று இந்நிலை?

விஷயம் ஏராளம், முதலில் உலகாளவிய தாக்கம். பாகிஸ்தான் பொருளாதாரம் சரியும் பொழுது நாம் சிரித்தோம், ஆம் முதலில் ஆசியாவில் சரிந்தது அதுதான்

அடுத்து சைனா, மிக பெரும் சரிவினை அவர்கள் கண்டிருக்கின்றார்கள்

ஜப்பானும் தென்கொரியாவும் தேக்க நிலையினை கண்டிருக்கின்றது

அரபு நாடுகளிலும் ஒருவித மந்த நிலை உலாவுவதை உணர முடியும்

உலகளாவிய மந்தத்தில் அரசு என்ன செய்யமுடியும்? இங்கு நாடு இயங்க வேண்டும்

உலகளாவிய சிக்கல் என்றால் இவர்களுக்கு புரியாது, சம்பளத்தில் காலணா விட்டுகொடுக்க ஒரு பயலும் தயாராக இல்லை

அரசுக்கு பொறுப்பு இருக்கின்றது, ஏதாவது செய்து நாட்டை இயங்க வைக்கும் கடப்பாடு உண்டு

டாலருக்கு மாற்றாக இந்திய பணத்தில் ஈரானிலும் ரஷ்யாவிலும் கொடுக்கும் பொழுது சந்தோஷபட்டோம் ஆனால் டாலரை பயன்படுத்தும் அமெரிக்கா விடுமா?

இப்படித்தான் சில மறைமுக நெருக்கடிகள் வரும்

தேசம் சிக்கலில் இருக்கும் பொழுது அரசியல்பேசுவது சரியல்ல‌

இது உலகளாவிய மந்தமும், அரசின் கரங்களுக்கு அப்பாற்பட்ட விஷயமுமாகும்

சேர்ந்து கைகோர்த்து நாட்டை மீட்பதே சரி