ராகுலும் அதற்கு தப்பவில்லை

எதையுமே தாமதமாக புரிந்து கொள்வது காங்கிரசின் பலவீனங்களில் ஒன்று, ராகுலும் அதற்கு தப்பவில்லை

காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் பாகிஸ்தான் அதில் தலையிட உரிமை இல்லை எனவும் , காஷ்மீர் கலவரத்துக்கு பாகிஸ்தானே காரணம் எனவும் சொல்லியிருக்கின்றார்

எல்லோரும் ஒப்புகொள்ளும் விஷயத்தை கடைசியாக ஒப்புகொள்வது காங்கிரஸ் கொள்கை போல‌

நம்மை சங்கி என்பார்கள் சில அங்கி மற்றும் மங்கி கோஷ்டிகள்

காங்கிரஸ் பெருந்தலைகளான சசிதரூரும், ஜெய்ராம் ரமேஷும் சில நல்லவிஷயங்களை சொல்கின்றார்கள்

அதாவது மோடி சில காரியங்களை நன்றாகத்தான் செய்கின்றார், நாம் அவரை குறை சொல்வதை விடுத்து நம் கட்சியினை பார்ப்போம் என சொல்லிவிட்டார்கள்

இதனால் இந்த இருவரும் அவசரமாக சங்கி பட்டியலில் இணைந்துவிட்டார்கள், இருவருக்கும் கட்டம் கட்டுகின்றார்கள்

சசிதரூர் ப.சி போல மகா முக்கிய காங்கிரஸ் அடையாளம் என்பது குறிப்பிடதக்கது

போகிற போக்கில் காங்கிரசுக்கு அடுத்த தேர்தலில் வசந்தகுமார் மட்டும்தான் அகில இந்திய அளவில் ஒரே எம்பியாக இருப்பார் போல…