ஒரு மண்ணும் புரியவில்லை
சாதி ஒழிப்பு இயக்கம் என்கின்றார்கள், கட்சி என்கின்றார்கள். ஆனால் இட ஒதுக்கீடு வேண்டும் என கொடியும் பிடிக்கின்றார்கள்
ஏன் என்றால் அப்பொழுதுதான் சாதிவாரியான கொடுமை தெரியுமாம் அதற்கு சான்றிதழும் கொடுக்கின்றார்கள்
சரி இட ஒதுக்கீடு கொடுத்து அவன் மேலே வந்துவிட்டால் அவனின் சாதி அடையாளத்தை நீக்கிவிட வேண்டும் அல்லவா என்றால் அதெல்லாம் முடியாது அதற்கு காரணம் பிராமணன் என்கின்றார்கள்
வறுமையினை சாதியினை வைத்தா அளவிடமுடியும் என்றால் ஆமாம் என்கின்றார்கள்
அப்படியானால் வறுமை நீங்கியபின் சாதி அடையாளம் ஏன் என்றால் மறுபடியும் குழப்பமான பதில்
ஒரு மண்ணும் புரியவில்லை
திராவிடம் பெரியாரியம் இன்னபிற முழக்கங்களை சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்
இதை சொல்லி ஆட்சியும் வாங்கி அதனால் எந்த சிக்கலை தீர்த்தார்கள் என கேட்டாலும் பதில் இல்லை
ஒரு சிக்கலை தீர்ப்போம் என கிளம்பி ஓராயிரம் சிக்கலை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்
எதையும் இவர்களுக்கு தீர்க்க தெரியாது மாறாக புதிது புதிதாக சிக்கலை உருவாக்க தெரியும்
ரபேல் விமானத்தில் ஊழல் என்பார்கள், ரபேல் விமானத்தை பற்றி 4 வார்த்தை சொல்லுங்கள் என்றால் சொல்ல தெரியாது
காஷ்மீர் என பொங்குவார்கள், லடாக் எங்கிருக்கின்றது என்றால் இஸ்லாமாபாத்துக்கு அந்தபக்கம் என்பார்கள்
இப்பொழுது இந்திய பொருளாதாரம் என்கின்றார்கள், சரி உங்களிடம் செயல்திட்டம் என்றால் என கேட்டால் சொல்ல தெரியாது
இப்படியாக இந்த சமூகத்தை முழு பைத்தியக்கார கூடமாக மாற்றி வைத்துவிட்டு மாரிதாஸுக்கு மென்டல் பட்டம் கட்ட கிளம்பிவிட்டார்கள்
காமராஜர் ஆண்மையற்றவர் என சொன்ன கூட்டம் இன்னும் தங்களை எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் ஏதாவது சொல்லும் கூட்டம் மாரிதாஸையும் அப்படி சொல்லாவிட்டால்தான் ஆச்சரியம்
ரஜினி திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தால் சூப்பர்ஸ்டார், இல்லாவிட்டால் மென்டல்
மூப்பனார் கலைஞரோடு இருந்தால் அறிவாளி இல்லையென்றால் மெண்டல்
அட அப்துல் கலாமையே உலோக ஆசாரி என சொன்ன கூட்டம் இது
இவர்கள் சொன்னபடி எல்லாம் ஆடும்பொழுது பிரபாகரன் போராளி, இவர்களுக்கு தேவைபடாத பொழுது அவன் அந்நியநாட்டு தீவிரவாதி சரணடைய வேண்டியவன்
ஆதரவளித்தால் விஜயகாந்த் நல்லவர் இல்லையென்றால் குடிகாரர்
இந்த பட்டமளிப்பு இயக்கம் மாரிதாஸை மென்டல் என அழைக்க தொடங்கியிருக்கின்றன
சரி அவர் எப்படியும் இருக்கட்டும், உங்கள் கட்சியின் ஆக சிறந்த அறிவாளியும் பல்துறை வித்தகரும் யார் என கேட்டால் முக ஸ்டாலின் என சிரிக்காமல் சொல்வார்கள்