வங்கி இணைப்பு விவகாரம்

அய்யய்யோ கோஷ்டிக்கு இப்பொழுது வங்கி இணைப்பு விவகாரம் கிடைத்துவிட்டது, இதோ இந்தியாவின் வங்கி எல்லாம் மூடிவிட்டார் நிர்மலா இது சங்கிகள் வங்கிகளை மூடும் காலம், அவ்வளவுதான் வங்கிகள் , வங்கி போச்சி பணமும் இனி போகும் என ஒப்பாரியினை தொடங்கிவிட்டார்கள்

வங்கி இணைப்பு இந்தியாவுக்கு புதிதா என்ன? வங்கிகள் வரலாறு உலகில் , இந்தியாவில் என்னென்ன இணைப்புகளை எல்லாம் கொடுத்திருக்கின்றது

தேசத்தின் உருவங்கள் மாறும்பொழுதெல்லாம் வங்கிகளின் இணைப்பும் உருவமும் தொடர்ந்துகொண்டேதான் வருகின்றன‌

இங்கு வங்கிமுறை வெள்ளையன் வருவதற்கு முன்பே இருந்தது, ஆனால் வங்கி என்ற பெயரில் அல்லாமல் நிதி நிர்வாகம் என்றபெயரில் இருந்தது, பர்மாவில் மிக சிறந்த வங்கி அமைப்பை அது அன்றே கொண்டிருந்தது, வங்கிகள் தேசத்தை ஆளும் என சொன்னவர்கள் செட்டியார்கள்

மேற்கே யூத இனமும் கிழக்கே செட்டி இனமும் அதை செய்துகொண்டிருந்தன‌

ஹிட்லரின் யூத வெறுப்புக்கு முதல் காரணமே யூதரின் வங்கி முறையும் ஜெர்மானியர் அதற்கு கட்டிய அநியாயமான வட்டியுமாகும்

பர்மாவில் செட்டியார்கள் அடிவாங்கவும் அதுதான் காரணம்

வெள்ளையன் பின்னாளில்தான் இந்த கோதாவில் குதித்தான்

இந்தியாவில் முறையான வங்கிகள் வெள்ளையன் காலத்தில் வந்தது தன் வியாபார ஸ்தலங்களான சென்னை, மும்பை, கல்கத்தாவில் அவன் பேங்க் ஆ மெட்ராஸ், பேங்க் ஆப் பாம்பே, பேங்க் ஆப் கல்கத்தா என தொடங்கினான்

எப்பொழுதுமே வெள்ளையன் ஒன்றை தொடங்கினால் இந்திய இந்து அமைப்புக்களும் சுதேசிகளும் போட்டிக்கு ஒன்றை தொடங்குவார்கள், அது கல்வி நிலையம் முதல் கப்பல் வரை இருந்தது

அப்படி ஏகபட்ட வங்கிகள் முளைக்க தொடங்கின, பஞ்சாப் மன்னர் பரோடா மன்னர் தமிழக செட்டிகள் எல்லாம் வங்கி தொடங்க ஆரம்பித்தனர்

நிலமையினை கவனித்த வெள்ளையன் வங்கிகளை இணைக்க தொடங்கினான், மூன்று வங்கிகளை இணைத்து இம்பீரியல் வங்கி உருவாக்கினான், வரலாற்றில் முதல் வங்கி இணைப்பு இங்கு அதுதான், பின்னாளில் இந்திய ஸ்டேட் பேங்க் ஆனது

இந்த வரலாறு நீண்டது , எழுதினால் பெரும் புத்தகமே எழுதலாம் என்றாலும் மகா சுருக்கமாக பார்க்கலாம்

அதாவது பல வங்கிகள் இருந்தன, சம்பாதித்தன அமெரிக்க உள்நாட்டு போரின்பொழுது அதாவது 1800களில் இங்கு நிலமை சிக்கலான பொழுது பல வங்கிகள் இணைக்கபட்டன, பல வீழ்ந்தன‌

எனினும் கொல்கத்தா வணிகர்கள், மெட்ராஸ் வணிகர்கள்,மும்பை வணிகர்கள் எல்லாம் அவ்வப்போது வங்கி தொடங்குவதும் இணைப்பதுமாக காலம் கடந்தது

கூட்டுறவு வங்கிகள் ரஷ்ய புரட்சிக்கு பின் அறிமுகமானது

முதல் உலகப்போர் வங்கிகளை இங்கு ஆட்டம் காண செய்தது எனினும் பேங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பொரேஷன் வங்கி, இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை தனித்து நின்றன‌

இன்றும் நிற்கின்றன‌

இரண்டாம் உலகப்போரிலும் பல வங்கிகள் தாக்குபிடித்த அன்றைய இந்தியாவின் லாகூரின் பஞ்சாப் நேஷணல் பாங்க் அசராமல் நின்றது

தெற்கே கனரா எனும் கன்னட பகுதியில் தெட்சன கனரா வங்கி தொடங்கபட்டு கனரா வங்கி ஆனது

( தமிழக வங்கிகள் பெரும்பாலும் செட்டியாரிடம் இருப்பதை கண்ட நாடார் சமூகம் மெர்கண்டைல் வங்கி தொடங்கி அது சிவசங்கரனால் அமுக்கபட்டு பின் மீட்கபட்ட கதையினை நீங்கள் அறிவீர்கள்

அதாவது வியாபரத்திற்கு முக்கியமானது வங்கி எனப்துதான் விஷயம்

திராவிட வங்கி என ஏதுவுமில்லை, திராவிட கழகம் என்பது முதலில் திராவிடருக்கான வங்கியாக இருந்தது பின்பு முரசொலி அறகட்டளை அந்த இடத்தை பிடித்தது

அவர்கள் சமூக நீதி காத்து வங்கி நீதியும் காத்தது இப்படித்தான் )

இதுவரை வெள்ளையன் கட்டுபாடு காலம், சுதந்திர போர் ஒருபக்கம், திராவிட இம்சைகளின் சமூக நீதி புரட்சி ஒருபக்கம் , நேதாஜி மறுபக்கம் என நாட்டில் என்னவெல்லாமோ நடந்தாலும் வங்கியினை ஒழுங்காக நடத்தினான் வெள்ளையன்

இன்றைய ஈராக்கில் தினம் 10 குண்டு வெடித்தாலும் எண்ணெய் தடையின்றி எடுப்பார்கள் அல்லவா அப்படி

சுதந்திரம் பெற்றபின் இந்திய வங்கிகளை கட்டுபடுத்த ரிசர்வ் வங்கி உருவாக்கபட்டது அதில் அம்பேத்கரின் பங்கு அதிகம்

பாகிஸ்தானுக்கு சென்றுவிட்ட சில வங்கிகளை இந்தியா இழந்தது இந்திய வங்கிகளை ரிசர்வ் பேங்க் மேலாண்மை செய்தது

சுதந்திர இந்தியாவில் வங்கிகள் வளர்ந்தன இன்னும் சில சர்ச்சைகளும் வந்தது

நேரு இன்சூரன்ஸ் பக்கம் சுற்றிகொண்டிருந்தார், தனியார் இன்சூரன்ஸ்களை ஒழிக்க எல்.ஐ.சி போன்றவற்றை கொண்டுவந்தார்

கூட்டுறவு வங்கிகளுக்கு அஸ்திவாரமிட்டார் நேரு

இந்திரா அடித்து ஆடினார், சுதந்திர இந்தியாவில் மன்னர்களுக்கு ஓய்வூதியமும் வங்கிகளில் கனத்த பங்கும் இருந்தது அதை குறிவைத்தார் இந்திரா

மன்னர் மானியத்தை நிறுத்திவிட்டு வங்கிகளை நாட்டுடமை என அறிவித்தார், சில வங்கிகள் இணைக்கபட்டன‌

ஆம் அவர்தான் இன்றைய காட்சிகளுக்கு முன்னோடி, வங்கிகளை
நாட்டுடமை ஆக்கியது சாதரண விஷயம் அல்ல‌

அதன் பின் காங்கிரஸ் 1990களுக்கு பின் மன்மோகன் ப.சி காலத்தில் பல தாராளமயமாக்கலை வங்கிகளில் செய்தது, கடன் பெறும் வசதிகள் எளிதாயின, பணம் அள்ளி எறியபட்டது

இதில்தான் பெரும் மாபியாக்கள் எல்லாம் உருவானார்கள், விஜய் மல்லையா, நீரவ் மோடி இன்னபிற வகையறா எல்லாம் இந்த பொற்காலத்தை பயன்படுத்தியவர்கள்

வாங்கிகொண்டே இருப்பார்கள், திருப்பி கட்டமாட்டார்கள், வங்கிகளும் ஏதும் கேட்காது, காரணம் சட்டங்கள் அம்மாதிரி தாராளமயமாக இருந்தது

பாஜக அரசு வந்ததில் இருந்து வாராகடன்களை குறிவைத்தது , சட்டங்கல் இறுகின விஜய் மல்லையா போன்ற கோஷ்டி தப்பி ஓடியது

இப்பொழுது இந்திரா எடுத்த நடவடிக்கை போல வங்கி இணைப்பினை நிர்மலா சீத்தாராமன் எடுத்துள்ளார்

இது ஒன்றும் புதிதல்ல, இந்தியாவில் 10 வருடம் முன்பே வரவேண்டிய திட்டம் தாமதமாகி இப்பொழுது வந்திருக்கின்றது

உலகளாவில் எல்லா வங்கிகளுமே இணைகின்றன, சிங்கப்பூர் கடந்த 6 , 7 வருடமாக இதை செய்துகொண்டிருக்கின்றது

இன்சூரன்ஸ் நிறுவணங்களும் அதையே செய்கின்றன, உலகலாவிய நிலையில் ஹாங்காங், ஜப்பான் நாடுகளின் இன்சூரன்ஸ் நிறுவணங்கள் இப்படி நிறைய இணந்துவிட்டன‌

எமக்கு தெரிந்து ஒரு ஜப்பானியர் 2011லே சொன்ன விஷயம் இது

போட்டிகள் அதிகமாகிவிட்ட உலகம் இது, அது வங்கி முதல் இன்சூரன்ஸ் வரை வருகின்றது

அரேபிய வங்கிகள், ஐரொப்பிய பராகசுர வங்கிகள் எல்லாம் ஒருவிதமான கருப்பு சந்தை பணம் போல் அடித்து விளையாடுகின்றன‌

வங்கிகள் என்பது சாதாரணம் அல்ல, நாட்டின் பணவரவின் முகம் என்பதால் அரசுகள் கடும் விழிப்பாய் கண்காணிக்கும்

வங்கிகளும் பல சிக்கல்களில் இருக்கின்றன, போட்டிகள், ஏடிஎம் மிஷின் பராமரிப்பு போன்ற செலவுகள், அதற்கு பின் இருக்கும் சிக்கல்களுக்கான பெரும் பணம் என அவற்றிற்கும் செலவு அதிகம்

இந்த செலவினை எப்படி ஈடுகட்டுவது? இரு கம்பெனிகள் சேர்ந்து ஆட்குறைப்பினை செய்துதான் ஈடுகட்ட முடியும்

அதாவது இரு வங்கியிலும் தலா 1000 பேர் இருந்தால் இரு கம்பெனிகள் இணையும்பொழுது 2000 பேர் ஆகிவிடுவார்கள் அல்லவா?

ஆனால் இரு வங்கி இணைந்தாலும் வேலை ஓன்றுதானே, இதனால் ஆட்குறைப்பு உள்ளிட்டவை செய்யலாம் இன்னும் பல புரிந்துணர்வுபடி போட்டிகளை சமாளித்து மார்கெட்டில் தாக்கு பிடிக்கலாம்

இது வங்கி மட்டுமல்ல விமான போக்குவரத்து, தயாரிப்பு உட்பட பெரும் பணம் விளையாடும் எல்லா இடங்களிலும் நடகின்றது

உலகெல்லாம் இந்த மாற்றம் 2010களிலே வந்தாயிற்று, ஏகபட்ட இணைப்புகள் நடந்தேறின‌

குறிப்பாக 2008 நெருக்கடிக்கு பின் அதிகம் நடந்தது, இது இந்தியாவிலும் அன்றே நடந்திருக்க வேண்டும்

வங்கிகள் இணைப்பு என்பதும் புரிந்துணர்வு என்பதும் கால காலமாக வெள்ளையன் காலத்தில் இருந்து இன்றுவரை உலகெல்லாம் நடக்கும் நடைமுறை, சில சீர்திருத்தங்களை செய்யும்பொழுது செய்வார்கள்

நிச்சயமாக இதை காங்கிரஸ் அரசுதான் செய்திருக்க வேண்டும் அவர்கள் செய்யவில்லை அதை பாஜக அரசு செய்திருக்கின்றது

முன்பு இந்திரா வங்கிகளை நாட்டுடமை ஆக்கியபொழுது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது, ஆனால் இந்திரா கண்டுகொள்ளவில்லை முறைபடி பத்திரிகையாளரிடம் பேசவும் இல்லை

அதுதான் சர்வாதிகாரம்

ஆனால் நிர்மலா பத்திரிகையாளரை சந்தித்தார் முறைப்படி விஷயங்களை சொன்னார், அரசின் நிலைப்பாட்டினை விளக்கினார்

இதுதான் ஜனநாயகம்….

ஆக அய்யய்யோ கோஷ்டி வழக்கம் போல அய்யய்யோ வங்கிகளுக்கு இந்த நிலையா? அகத்தியன் காலத்திலிருந்து பழனிச்சாமி காலம் வரை இப்படி நடந்ததே இல்லையே என ஒப்பாரி வைக்கும்

அதை எல்லாம் புறந்தள்ள வேண்டும்

காலத்துக்கு ஏற்ப இங்கு வங்கிகளும் அதன் முகங்களும் இணைப்புகளும் மாறி வந்து கொண்டேதான் இருக்கின்றன, அது இப்பொழுது தொடர்ந்திருக்கின்றது அவ்வளவுதான் விஷயம்

2010ல் காங்கிரஸ் அரசு செய்ய தவறியதை நிர்மலா செய்திருக்கின்றார் என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை