என்ன தலையினையா வாங்கமுடியும்?
ப.சிதம்பரத்தை ஒருவழி செய்துவிட வேண்டும் என சிபிஐ அமைப்பும் அதன் பின்னணியில் இருக்கும் சக்திகளும் தலைகீழாக நின்றாலும் தேர்ந்த நிர்வாகியும் அரசியல்வாதியுமான சிதம்பரத்திடம் இருந்து ஒரு தகவலையும் பெறமுடியவில்லை
என்ன தலையினையா வாங்கமுடியும்? என்ற அளவில் அவர்போக்கில் இருக்கின்றார், விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என சிபிஐ புலம்புகின்றதே தவிர வேறொரு தகவலையும் சொல்ல முடியவில்லை
ப.சிதம்பரத்தை இனி மனதால் முடக்க அதாவது உளவியல் தாக்கத்தை ஏற்படுத்த சில காரியங்களில் இறங்கிவிட்டார்கள் , இந்த இந்திராணி முகர்ஜி வாய் திறந்தது அல்லது திறக்கவைக்கபட்டது அப்படித்தான்
இன்னும் பெண் பிரபலங்கள் வாய்திறக்கலாம்
பொதுவாக தகப்பன் செய்யும் பாவம் பிள்ளைக்கு என்பார்கள், இங்கே பிள்ளை செய்த பாவம் தந்தையினை துரத்துகின்றது என்பதுதான் வினோதம்