எங்கிருந்தாலும் வாழ்க

வழக்கமாக அய்யய்யோ என கத்தும் கோஷ்டிகள் , இப்பொழுது அப்படியா? என கண்களை விரிக்க பார்த்துவிட்டு மனதுக்குள் முணக தொடங்கிவிட்டன‌

ஆம் பாஜக பார்ப்பன கட்சி, நிர்மலா எனும் பாப்பாத்தியினை சாதி பார்த்து அமைச்சராக்கினார்கள், சூத்திர தமிழிசையினை தெருவில் நிறுத்தினார்கள் இதுதான் ஆரிய பார்பானியம் என ஒரே அட்டகாசம்

பாஜக மாநில தலைவராய் சூத்திரரை நிறுத்தியதும், தூத்துகுடியில் வெல்ல்வார் என வாய்ப்பு கொடுத்ததும் அவர்களுக்கு தெரியாது அல்லது மறைப்பார்கள்

இப்பொழுது அக்காவினை தெலுங்கானா ஆளுநர் என அறிவித்துவிட்டது பாஜக‌

இது அய்யய்யோ கோஷ்டிகளுக்கு பலத்த அதிர்ச்சி, இனி பாஜகவினை சாதிகட்சி என சொல்லமுடியாதபடி அவர்கள் வாயில் பிளாஸ்திரி போட்டாயிற்று

மறைக்க ஒன்றுமில்லை அல்லது மறைக்க விரும்பவில்லை. இது அரசியல் ஆளாளுக்கு என்ன லாபம் என பார்க்கும் அரசியல்

பாஜக வளராததன் காரணம் இங்கு அதுதான் அந்த கட்சியில் பணம் கொட்டி செலவழித்தால் பதவி கிடைக்காது இன்னபிறவும் கிடைக்காது என்றுதான் அதை தமிழக அரசியல் அபிலாஷை பிடித்தவர்கள் தள்ளி வைத்தார்கள்

திமுக அதிமுகவில் செலவழித்தால் பதவி நிச்சயம் என்பதுதான் இங்கு அரசியல், கடந்த தேர்தலில் காசும் பணமும் இல்லாதோர்க்கு சீட் இருகட்சியிலும் கொடுக்கபடவில்லை என்பது இன்னொரு விஷயம்

இப்பொழுது பாஜக அதை உடைக்கின்றது, அழகான விஷயத்தை கோடிட்டு காட்டுகின்றது

அது என்ன தெரியுமா?

ஒளிமயமான எதிர்கால பாஜகவினருக்கு தெரிகின்றது என்பது

ஆக “வாராயன் தோழி வாராயோ தெலுங்கான கவர்னராக வாராயோ..” என அக்காவினை ஐதரபாத்துக்கு அழைத்து சென்றுவிட்டார்கள்

ஆக தமிழகத்தில் மலர வேண்டிய தாமரையினை அக்கா இனி ஐதரபாத்தில் மலர வைப்பார்.

அக்கா ஐதரபாத் என்ன? ஐ.நா சபை தலைவரானாலும் அடிக்கடி தமிழக அரசியலில் தலைகாட்ட வேண்டும் என கண்களில் நீர் கோர்க்க கேட்டுகொள்கின்றோம்

அக்கா இல்லா தமிழகம் இனி வண்டு இல்லா மலர்சோலை , ரீங்காரம் இருக்காது

அக்கா அடிக்கடி வரவேண்டும், அடிக்கடி அப்டேட் தரவேண்டும்

ஆக பாஜக சாதி அபிமான கட்சி இல்லை அல்லவா என நம் அய்யய்யோ கோஷ்டிகளிடம் சிரித்தபடி கேட்டால் ஆளுநர்தானே என்ன அவரை குடியரசு தலைவராகவா ஆக்கிவிட்டார்கள் என அலுத்துகொண்டன‌

அட குடியரசு தலைவரும் பார்பான் அல்ல தாழ்த்தபட்டவர்தானே என கேட்டால் வழக்கமான பதில் கிடைத்தது

என்ன பதில்? அதே தான்

“போடா சங்கி, எவளோ பிராமண‌ மாமி உன்ன மயக்கி இப்படி ஆக்கிட்டா , குஷ்புவுக்கு துரோகம் பண்ணிட்டல்ல , நீ உருப்படவே மாட்ட..அந்த மாமியும் நாசமாய் போவா”

நல்லது, நானும் மாமியும் எப்படியும் போகட்டும் ஆனால் தேசிய அரசியல்வாதியாக பதவி உயர்வு பெற்று செல்லும் அக்காவுக்கு வாழ்த்துக்கள்

அக்கா “எங்கிருந்தாலும் வாழ்க”

ஆக ” ஏ..தமிழ் கூறும் நல்லுககமே உயிர் கொள், உனக்கான விடிவு வந்தே விட்டது, பாஜகவினை நம்பினார் கைவிட படார்..”