தமிழிசைக்கு ரசிகர்கள் பெரும்பாலும் திமுகவிலும் இதர கட்சியிலும்தான்
தமிழிசைக்கு ரசிகர்கள் பெரும்பாலும் திமுகவிலும் இதர கட்சியிலும்தான் இருந்திருப்பார்கள் போல
அக்கா தெலுங்கானா கவர்னாராகிவ்ட்டார் என்றவுடன் கண்ணீர் வடிக்கின்றார்கள், இதெல்லாம் அக்காவுக்கான சதி இம்மாதிரி பதவிக்கு சென்றால் அதன் பின் மாநில அரசியலுக்கு திரும்பவே முடியாது என கடும் உருக்கம்
ஆமாம் அவர் ஏன் திரும்ப வேண்டும், இவர்கள் பரட்டை கருப்பி இன்னபிற அடையாளங்களில் கரித்து கொட்டவா?
அக்கா கவர்ணராகிவிட்டார் இன்னொரு நாளில் குடியரசு தலைவரானாலும் ஆகிவிடுவார்
சரி அதெல்லாம் இருக்கட்டும், திமுக எத்தனை கவர்ணர்களை உருவாக்கியது இதர தேசிய அடையாளங்களை உருவாக்கியது என கேட்டால் பதிலே இல்லை
ஒருவேளை அப்துல்கலாம் விஞ்ஞான உலகுக்கு திரும்ப வேண்டும் என்றுதான் அவர் இரண்டாம் முறை ஜனாதிபதியாவதை திமுக தடுத்ததோ?
இப்பொழுதுதான திமுகவின் நாட்டுபற்று உலகுக்கே புரிகின்றது
அட இவ்வளவு நாட்டுபற்று உள்ளவர்களையா மாரிதாஸ் சந்தேகபட்டார்?
பெரும் திறமையானவர்கள் என்றாலும் ராவணனோடு இருந்தவர்கள் அழிந்தார்கள் அடையாளமில்ல்லை
ஆனால் ராமனை நம்பியதற்காக அனுமார் இன்றும் வணங்கபடுகின்றார்
ஆக ராமனை போல ராமர் கட்சியும் யாரை கைவிடுவதில்லை என்பது நிரூபணமாயிற்று