இனி விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடக்கும்
இனி விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடக்கும்
சிந்தனை சில இடங்களுக்கு தாவுகின்றது, இதே மலேசியாவில் அது இஸ்லாமியநாடு என்றாலும் இந்துக்களுக்கும் அவர்களின் ஆலயங்களுக்கும் அரசு மரியாதை இந்தியாவினை விட அதிகம்
பத்துமலை கோவில் ஊர்வலமோ இல்லை இதர இந்துமத ஊர்வலமோ அரசு அனுமதியுடன் உற்சாகமாக நடைபெறும்
இந்து ஊர்வலத்துக்கு இஸ்லாமிய பொலீசார் முழு புன்னகையுடன் பாதுகாப்பு வழங்குவார்கள் , ஊர்வலம் மசூதியினை தாண்டினாலும் அருகில் சென்றாலும் ஒரு சிறு சலசலப்பு இருக்காது
மக்களின் மனம் அப்படி
உங்கள் வழி உங்களுக்கு, எம் வழி எமக்கு அதை தாண்டி நீவிரும் நாமும் சகோதரர் எனும் அந்த மனப்பானை இருக்கின்றது அல்லவா அதை கை எடுத்து வணங்கலாம்
அருமை இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் எல்லாம் தலைகீழ்
ஒருநாள் ஊர்வலம் அல்லவா என இவர்களுக்கும் மனமில்லை, ஊர்வலத்தில் கிஞ்சித்தும் அவர்களை காயபடுத்த கூடாது என்ற சிந்தனை இவர்களுக்குமில்லை
அந்த மனங்கள் அவ்வளவு குறுகிவிட்டதுதான் கொடுமை
மதங்களின் பண்டிகைகள் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்கும் வாய்ப்பாக பல் இன மத மக்கள் வாழும் நாட்டில் கொண்டாடபட வேண்டும்
இந்தியாவில் அதற்கு வாய்ப்பே இல்லை
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்பார் திருமூலர்
ஆனால் மனதை செம்மைபடுத்திவிட்டு மந்திரம் ஜெபிப்பது ஒன்றும் தவறல்ல
மக்களின் மனங்கள் மாற அந்த பெரும் தெய்வமான பிள்ளையார் அருள்புரியட்டும் என்பதை தவிர என்ன வேண்டி கொள்ளமுடியும்?