ஈரான் எப்படியாவது ஒரு செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப படாதபாடு படுகின்றது
ஈரான் எப்படியாவது ஒரு செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப படாதபாடு படுகின்றது, அப்படி நிறுத்திவிட்டால் தன் ராணுவ பாவனைக்கு பாவிகலாம் என்பது அதன் திட்டம்
ஆனால் செயற்கை கோளை அந்நாடு விண்வெளியில் நிறுத்தினாலும் அதை செயல்படாமல் முடக்கி போட அமெரிக்கா முயற்சிக்கும் என்பது எல்லொருக்கும் தெரிந்த விஷயம் ஈரான் உட்பட
எனினும் அது செயற்கைகோளை ஏவ முயன்று நேற்று 3ம் முறையாக தோற்றிருக்கின்றது
கிளம்பும் முன்பே ராக்கெட் வெடித்து சிதறியிருக்கின்றது
அது வெடித்து சிதறிய காட்சியினை டிரம்ப் தன் வழக்கமான கிண்டலுக்காக வெளியிட்டுவிட்டார்
ஆம் அது அமெரிக்க செயற்கைகோள் அல்லது உளவு விமானம் மூலம் எடுக்கபட்ட படம், ஆக எம்மை உளவு பார்க்கின்றீர்கள் அப்படித்தனே, இதோ அமெரிக்கா எம்மின் தலைவரை வந்துவிட்டது என அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டது ஈரான்
அமெரிக்க உளவு மற்றும் பாதுகாப்புதுறை தலையில் கைவைத்தபடி அமர்ந்திருக்கின்றது
அதாவது அவர்கள் உளவு பார்த்து படமெடுத்து அதிபர் என்றமுறையில் டிரம்பிடம் படத்தை கொடுத்து கடமையினை செவ்வனே செய்துவிட்டார்கள்
ஆனால் டிரம்ப் கொஞ்சமும் பக்குவமின்றி வெளியிட்டுவிட்டார், அது நிச்சயம் சரி அல்ல
ஆனால் டிரம்பானவர் வம்பானவர் அல்லவா? ஒரு அதிபருக்கு ஒரு படத்தை கூட வெளியிட உரிமை இல்லையா? என வசனம் பேசிவிட்டு கிளம்பிவிட்டார்
அமெரிக்க உளவு அமைப்ப்பு இனி அவரிடம் படமே கொடுக்க கூடாது என முடிவு செய்திருக்கும்
துரதிருஷ்டவசமாக 2011ல் டிரம்ப் இல்லை, இருந்திருந்தால் நிச்சயம் பின்லேடன் கொல்லபட்ட படத்தை வெளியிட்டிருப்பார்
ஒபாமா அதை கடைசிவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது
என்ன செய்வது உலகம் கொடுத்து வைத்தது அன்று அவ்வளவுதான்