ஸ்டாலின் விஜய் திடீர் சந்திப்பு

ஸ்டாலின் விஜய் திடீர் சந்திப்பு

ஒரு காலத்தில் ராமசந்திரன் எனும் நடிகனை வைத்து ஆட்சிக்கு வந்தது திமுக, ஒரு நாள் தூக்கத்திலிருந்து விழித்த ராமசந்திரன் உங்கள் கொள்கையா என் முகமா? பார்த்துவிடலாமா என சொல்லி கிளம்ப, அவர் இருக்கும் வரை திமுக தலைகாட்ட முடியவில்லை

அதன் பின் ராமசந்திரன் காலம் முடிந்தபின்பு அதுவும் அக்கட்சி உடைந்தபின்பே ஆட்சிக்கு வந்தது, அதன் பின் ஒரு நடிகையிடம் தோற்றது

பின் ரஜினி எனும் நடிகனின் முகத்தை வைத்து ஆட்சிக்கு வந்தது

2006ல் காங்கிரஸ் துணையுடன் மைனாரிட்டி அரசாக நீடித்தது, அதற்கு காரணம் விஜயகாந்த் எனும் நடிகன்

அதன் பின் அதே விஜயகாந்துக்கு வலை வீசி காத்திருந்தது, அவர் தப்பிவிட்டார் இவர்கள் பழம் நழுவியது என சொன்னாலும் உண்மையில் நழுவியது ஆட்சி

ஆக அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை நடிகனையே நம்பி ஏரோட்டும் கட்சி திமுக‌

அது விஜயினை சந்திப்பதில் என்ன ஆச்சரியம்

கேட்டால் பெரியார் கொள்கை திராவிடம் என்பார்கள், அதன் விளக்கம் சினிமாவில் நடிக்கவேண்டும் என்பதாக இருக்கலாமோ என்னமோ?..