விநாயகர் ஒரு ஆரிய பார்பண திணிப்பு
விநாயகர் ஒரு ஆரிய பார்பண திணிப்பு. அவர் தமிழர் கடவுளே இல்லை என்றொரு கோஷ்டி கிளம்பிவிட்டது
அவர் வடநாட்டு கடவுளாம், சரி தென்னாட்டு தமிழ்கடவுள் யாரென்றால் அவர் முருகராம்
சரி கார்த்திகை மாதம் பழனிக்கும் திருச்செந்தூருக்கும் காவடி எடுக்க தயாரா என கேட்டால் பதில் வராது
கணபதி என்ன அகத்தியரே வடக்கே இருந்துதானே வந்தார், அவர்தானே தமிழ் இலக்கியம் கொடுத்தார் அப்படியானால் அவர் என்ன வந்தேறியா? தமிழ் வந்தேறி மொழியா தமிழனுக்கு தமிழ் சொந்தமில்லையா என கேட்டால் பதிலே இல்லை
விநாயகர் தமிழ் கடவுள் இல்லை என சொன்னால் ‘விநாயகர் அகவல்’ னு ஔவையார் ஏன் நூல் இயற்றினார்.?
அருணகிரிநாதர் ஏன் முதல் பாடலாக விநாயகர் துதி பாடினார்?
திருமுறுகாற்றுப்படை தந்த சங்கத்தமிழ் புலவர்கள்
“முருகனே! செந்தில்முதல்வனே! மாயோன் மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன் தம்பியே! நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்”னு ஏன் பாடினார்கள்?
பிள்ளையார்பட்டியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பாண்டிய மன்னர் ஏன் கற்பக விநாயகர் கோவில் கட்டினார்?
அதற்கு முன்பே கடல்தாண்டிய செட்டி சமூகம் தென்கிழக்காசியா எங்கும் பிள்ளையாரை சுமந்து திரிந்தது ஏன்?
திருச்சி உச்சி பிள்ளையார் கோவிலை சோழர்கள் அமைத்து பல்லவர்கள் நாயக்க மன்னர்கள் என ஏன் மேம்படுத்தினார்கள்?
இக்கேள்விக்கெல்லாம் அவர்களிடம் பதில் இல்லை
விநாயகர் வடக்கத்திய வந்தேறி கடவுள் என்றால், அகத்தியர் யார்? அவர் கொடுத்த தமிழ் என்ன மொழி
தொல்காப்பியனின் குருநாதன் ஒரு வந்தேறியா?
ஒரு மொழி கூட இல்லாதவனா தமிழன்? அய்யகோ என்ன கொடுமை இது?