மாமல்லபுரத்தில் மோடியும் சீன அதிபரும் சந்திப்பு
மாமல்லபுரத்தில் மோடியும் சீன அதிபரும் சந்திப்பு எனும் செய்தி பல விஷயங்களை கொண்டது
முதலாவது தமிழகத்தில் இனி தேசிய பிரபலங்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதும், எதுவுமே பேசமுடியாதபடி இங்கு தமிழக கட்சிகள் வாயினை அடைக்க பெரும் திட்டம் தீட்டபடுகின்றது என்பதும் தெரிகின்றது
இது மிக நுட்பமான தந்திரம், தமிழகம் என்பது இந்தியாவில் ஒட்டாமல் ஒரு மாதிரி திரியும் பொழுது. “எக்ஸ்கியூஸ் மி இது இந்தியா” என சொல்லி வருகின்றது மத்திய அரசு
இம்மாதிரி உலக கவனங்களை இங்கே குவித்தால் லோக்கல் செய்திகளும் இன்னபிற அழிச்சாட்டியங்களும் அடிபட்டு போகும், தேசிய கவனம் இங்கே கூடும்
மீறி திராவிட இம்சைகள் ஏதும் செய்யவும் முடியாது, செய்தால் அதிருப்தி கூடும். அதையும் மீறி செய்தால் செய்ய வேண்டியதை கூடுதல் உற்சாகத்துடன் மத்திய அரசு செய்யலாம்
இங்கே மத்திய அரசோ தேசிய கட்சியின் பிம்பங்களோ வளர்வதை சில சக்திகள் விரும்பாது
காமராஜர் விரட்டபட்டார், இந்திரா தாக்கபட்டார், ராஜிவ் கொல்லபட்டார், அத்வாணி மயிரிழையில் தப்பினார்
அப்துல்கலாமுக்கு கல்லறை கிடைத்ததே பெரும் விஷயம்
அப்படிபட்ட தமிழ்நாடு இது, இதனால்தான் மன்மோகன் சிங் கலைஞர் இறந்தபொழுதும் ஏன் இப்பொழுது கூட இங்கு வரவில்லை
ராஜிவுக்கு பின் யாரும் இங்கு சவால் எடுக்க தயார் இல்லை, பயம் அல்லது ஒருவிதமான ஒதுங்கிசெல்லும் தன்மை அது
மோடி அதை துணிச்சலாக எதிர்கொள்கின்றார்
மாமல்லபுரத்தில் சீன அதிபருக்கு பல்லவ சிற்பங்களை காட்டி, காஞ்சிபுர பட்டுதுணியினை பரிசளிக்கவா அழைக்கின்றார்?
ஒரே கல்லில் பல மாங்காய்
உங்களுக்கு முன்பு நடந்தது நினைவிருக்கலாம், முன்பு மோடி சீனா சென்றபொழுது தனியா சில இடங்களுக்கு ஜின்பெங் அழைத்து சென்றார், அவை கலாச்சார வரலாற்று ரீதியாக இந்தியா சீனா தொடர்புடயவை
அப்படி போதிதர்மன் எனும் சீனாவின் அகத்தியனான டாவோ இந்த மாமல்லபுரத்துகாரன் என்பதால் இங்கு பாயிண்டாக நிற்கின்றது இந்தியா
இங்கே உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம், அப்படியானால் நாளந்தா உட்பட வடக்கே ஏன் அழைக்கவில்லை
விஷயம் அங்குதான் இருக்கின்றது, திபெத் அகதிகள் அதிகம் உள்ள இடம் அது, சீன அதிபர் வந்தால் சூழ்ந்து கொண்டு கத்துவார்கள், சீனா அதை விரும்பாது
மாமல்லபுரம் அப்படி அல்ல திபெத் அகதிகளை வைகோவும் ஸ்டாலினும், சீமானும் இன்னபிற கும்பலும் கண்டெய்னரில் அள்ளி வந்துஇறக்கினால்தான் உண்டு அது சாத்தியமில்லை
ஏகபட்ட விஷயங்களை கணக்கிட்டு சீன அதிபர் சந்திப்பினை கன கச்சிதமாக இங்கே நடக்க திட்டமிடுகின்றார்கள்
ஏதும் முணுமுணுப்பு வந்தால் பாதுகாப்பு என்ற ஒற்றை சொல்லில் அனைவரையும் சாத்தலாம் என்பது கூடுதல் வசதி
இனி அடிக்கடி உலக தலைவர்களை தமிழ்நாட்டில் பார்க்கலாம் போல
டிரம்ப் இனி தூத்துகுடி முயல்தீவு நல்ல தண்ணி பக்கம் நடமாடலாம்
ஏஞ்சலா மெர்கல் திருச்சி மலைகோட்டையில் தரிசனம் கொடுக்கலாம்
கனடா அதிபர் டுரூடோ ராமேஸ்வரம் வந்து பைனாகுலர் மூலம் யாழ்பாணத்தை பார்க்கலாம்
ஏன் புட்டீனே ராதாபுரம் வந்து மோடியுடன் அணுவுலை பற்றி பேட்டி கொடுக்கலாம் , ஏகபட்ட வாய்ப்புகள் உண்டு
ஆக தமிழக மக்களுக்கு எல்லா நாட்டு தலைவர்களையும் பார்க்க வாய்ப்பு வந்தாயிற்று
எல்லா தலைவரும் வரலாம் சிக்கல் இல்லை ஆனால் ஒருவர் வந்தால் தாங்காது, அவர் பெயர் பெஞ்சமின் நேதன்யாகு
ஒருவேளை அவர் தமிழகம் வந்தால் “பாலஸ்தீன் சிரிய ஈராக்கிய இஸ்லாமியரை கொல்லும் யூத கொலையாளியே திரும்பி போ” என நிச்சயம் கொந்தளிப்பு வரும்
அதனால் என்ன செய்யலாம், எந்த இடம் அவருக்கு பாதுகாப்பானது
ஆம், மார்த்தாண்டம் கிள்ளியூர், விளவங்கோடு , மண்டைக்காடு போன்ற பாஜகவின் கோட்டை பகுதிகளில் அவரை வரசொல்லலாம்
நிச்சயம் கிறிஸ்தவர்களும் இயேசு பிறந்த பொன்னான பூமியிலிருந்து வரும் மனிதர் என அவரை வரவேற்பார்கள்
இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து வரவேற்பதால் சிக்கலே இல்லை
அந்த நேதன்யாகுவும் சும்மா சென்றுவிடுவாரா? மாட்டார்
இங்கு ராமர்கோவில் கட்ட ஆதரவு என்பார் உடனே பாஜககோஷ்டி கைதட்டும், கிறிஸ்தவ கோஷ்டி முகம் சுருங்கும்
விடுவாரா நேதன்யாகு?
“ஜெருசலேமில் கர்த்தராகிய தேவன் நம் கரங்களில் ஒப்படைத்திருக்கும் மசூதியினை இடித்துவிட்டு சாலமோன் அரசன் ஆலயம் கட்டிய இடத்தில் 3ம் ஆலயம் கட்ட ஒத்துழைப்பீர்களா? அவரே சதா சர்வ காலமும் வல்லவர், பைபிளில் கூட அந்த ஆலயம் சொல்லபட்டிருகின்றது வேதபுத்தகம் ராஜாக்கள் ஆகமத்திலே..
அந்த மகா தூய தேவனின் ஆலயம் கட்டபட இந்திய ஆதரவும் உங்கள் ஆதரவும் வேண்டும் என சொன்னால் என்னாகும்?
பால் தினகரனும், மோகன் சி லாசரஸும் தேவனுக்கே ஸ்தோத்திரம் என ஓடிவரமாட்டார்களா
“ஜெருசலேமில் கோவில் கட்டபோகும் நேதன்யாகுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தாவே, நன்றி ராஜா இந்த இரண்டாம் சாலமோனுக்காக நன்றி” என நீட்டி முழங்கிவிட்டு
“இந்த அருமை மகன் நேதன்யாகுவுக்காக கை நீட்டும் இந்த தேசாதிபதி மோடிக்காக மன்றாடுகின்றோம் கர்த்தாவே..” என சொன்னால் மோடியே அழுதுவிட மாட்டாரா?
இம்மாதிரி காட்சிகள் எல்லாம் இனி தமிழகத்தில் அரங்கேற போகின்றன
( ஜெருசலேமில் 3 ஆலயம் கட்டுவது சரி என சொல்லிவிட்டு ராமருக்கு கோவில் கூடாது என எந்த கிறிஸ்தவன் இந்தியாவில் சொல்லிவிட முடியும்? )
தமிழகம் இனி உலக அரங்கில் அடிக்கடி பிரகாசிக்க போகின்றது
சிலப்பதிகார காலம், சேர சோழ பாண்டியர் காலத்தை அடுத்து இப்பொழுதுதான் உலக நாடுகள் தமிழகத்தை தேடி வருகின்றன

ஆக திராவிட, தமிழ் கட்சி தலைவர்களெல்லாம் மீட்டெடுக்க முடியாத தமிழக வரலாற்று பெருமையினை மோடிதான் மீட்டெடுத்திருகின்றார்
