தெரிந்தால் என்ன செய்வார்?

சிம்புவால் தங்களுக்கு நஷ்டம் அவரிடமிருந்து நஷ்ட ஈடு வேண்டும் ஏதாவது காவல்துறை அல்லது நீதிமன்றம் செய்ய வேண்டும் என தயாரிப்பாள சங்கம் சொல்லிகொண்டே இருந்தது

அவர்களை மேலும் கடுப்பேற்ற என்ன செய்யலாம் என கடுமையாக சிந்தித்த சிம்பு வெற்றி புன்னகையுடன் தாய்லாந்து சென்றுவிட்டார்

ஆம் அந்த தாய்லாந்துதான்

தயாரிப்பாளர்களை கதற கதற அழ வைக்க அதை தவிர வெறு திட்டம் அவரிடம் இல்லை, இதனை விட சிறந்த‌ திட்டம் இருக்கவும் முடியாது

இதனால் ஆடிபோன தயாரிப்பாளர்கள் இப்படியே விட்டால் சிம்பு இனி அப்படியே மக்காவ், ஜப்பான், ஸ்பெயின், நெதர்லாந்து, கோஸ்டோரிக்கா என சுற்றிகொண்டே இருப்பார் அவர் பாஸ்போர்ட்டை முடக்குங்கள் என கதறி புகார் கொடுத்திருக்கின்றது

(நல்ல காவல் அதிகாரி என்றால் எம்.ஆர் ராதா பாணியில் ஏண்டா டேய் என்கிட்ட கேட்டுட்டா அவனை வச்சி படம் எடுத்தீங்க?

ஆசை பூரா பயலுக்கும் அதிக ஆசை, அப்புறம் ஏண்டா இங்க வந்து அழுறீங்க என விரட்டியிருக்க வேண்டும்)

சிம்புவுக்கு விஷயம் தெரியுமா தெரியாதா என தெரியவில்லை

தெரிந்தால் என்ன செய்வார்?

டிவிட்டரும், முகநூல் பக்கமு, வீடியோ எடிட்டிங்கும் எதற்கு இருக்கின்றன‌

பழைய கமல், எம்ஜிஆர் படங்களுக்கு கண்ணதாசனும் வாலியும் ஏன் சில டி.ஆர் எழுதிய‌ பாடல்களை எப்படி எடிட் செய்து தயாரிப்பாளர்களை எப்படி வெறுப்பேற்ற வேண்டும் என்பதை சினிமாவிலே பிறந்து வளர்ந்த சிம்புவுக்கு சொல்லியா தரவேண்டும்?

“காலை ஜப்பானில் காபி,
இரவில் நியூயார்க்கில் காபரே” எனும் வரிகள் கொண்ட
எங்கேயும் எப்போதும்
சங்கீதம் சந்தோஷம்…
. ராத்திரிகள் வந்துவிட்டால்,,” என கண்ணதாசன் எழுதியது யாருக்காக?

“பச்சைகிளி முத்துசரம்
முல்லை கொடியாளோ..” என தாய்லாந்து நடிகையுடன் ராம்சந்தர் ஆடியது யாருக்காக?

“ஹத்தியக்கு சுக்காவா,
லாலுகத்து ஹிந்தாவா.
சாயா பாண்டாங் திரிமு..” என மலாய் நடிகையுடன் ரஜினி ஆடியது எதற்காக?

எல்லாம் தாய் கிளிகளுக்காக…

அட ” ரீனா, கீதா. மீரா, கீதா, பார்வதி வர்றடா பாத்துக்கோடா…

மன்மதன் ரட்சிக்கணும்
இந்த மங்கையர் காளைகளே,
மங்கையய் மயக்கும் மந்திர பூஜை என்னென்ன சொல்லடா..
இளம் பெண்களை வெல்லடா” என டி.ஆரே எழுதி ஜாலி ஆபிரகாம் ஜாலியாக பாடியதெல்லாம் என்ன வகை

“தந்தை மகற்காற்றும் உதவி”யன்றி வேறென்ன‌

மிஸ்டர் சிம்பு, எம்முடைய ஏராளமான பணி சுமைகளுக்கிடையே உங்களுக்கும் ஆலோசனை தந்திருக்கின்றோம், இதை பயன்படுத்தி அந்த தயாரிப்பாளர்களுக்கு இன்னும் கடும் வெறுப்பினை ஏற்றிவிடுங்கள், கதறி சாகட்டும்.

இனி உங்களுக்கு வாய்ப்பே தர கூடாது எனமுடிவெடுத்த பின் அந்த தயாரிப்பாளர்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன?

இல்லை இப்படி எல்லாம் பாடினால் உங்கள் திருமணம்தான் தடைபடுமா? அது நடக்கவா போகின்றது?

ம்ம் ஸ்டார்ட்..