அட்டகாசமான அரசியல் இது..
நாமெல்லாம் தெலுங்கானா கவர்ணராகிவிட்ட தமிழிசையினை நோக்கி கொண்டிந்தோம், பாஜகவினர் கே.ஆர் விஜயா போல இயல்பான புன்னகையில் வாழ்த்தினார்கள்
எதிர்கட்சியினர் சுஹாசினி போல முகத்தை ஒருமாதிரி சுளித்துகொண்டு வாழ்த்தினார்கள்
விஷயம் வாழ்த்து அல்ல, கேரள கவர்ணரை பற்றியது
கேரளாவின் கவர்ணராக நியமிக்கபட்டிருப்பவர் ஆரிப் முகமது கான், உபி இஸ்லாமியர்
நம்ம ஊர் ப.சி போல அக்கால காங்கிரசில் முக்கிய புள்ளி
ராஜிவ் அரசில் அவர் அமைச்சராக இருந்தபொழுது ஷபானு என்பவரின் விவாகரத்து சர்ச்சையான பொழுது காங்கிரஸில் இருந்து வெளிவந்தார்
ஷாபானு வழக்கு அக்காலத்தில் பிரசித்தி பெற்றது, பெரும் கதை அது, சுருக்கமாக இப்படி சொல்லலாம்
இஸ்லாமிய விவகாரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை சொன்னது, அது அதிருப்தியாகி நாடெல்லாம் போராட்டம் கண்டது
ராஜிவ் காந்தி தலையிட்டு நீதிமன்ற தீர்ப்புகள் இஸ்லாமிய மகளிர் உரிமையினை பாதிக்காதவாறு ஒரு சட்டம் கொண்டுவருவதாக சொல்லி சட்டத்தை மாற்றினார்.
அதாவது மற்ற சமய பெண்கள் ஜீவனாம்சம் பெறுவது போல மாத மாதம் இஸ்லாமிய பெண்கள் பெறமுடியாத அளவு ஒரு மாதிரி ஆக்கிவைத்தார் ராஜிவ்
ஒருமாதிரியான சட்டம் அது, பொதுசிவில் சட்டம் வேண்டும் என்ற குரலே அது வந்தபின்புதான் ஓங்கி ஒலித்தது
சிறுபான்மையினர் என்றால் சீக்கியர் தவிர எல்லோர் மேலும் பொங்கும் காங்கிரஸ் ஆரிப்பின் மேல் பொங்கியது, அந்த சர்ச்சையில் அந்த சட்ட திருத்தத்தில் வெளிவந்தார் ஆரிப்
வந்தவர் ஜனதாவில் இருந்தார் பின் பாஜக கட்சிக்கு தாவினார்,அக்கட்சியும் அவரை அணைத்தது
இவ்வளவுக்கும் உபியில்தான் பாபர் மசூதி இருந்தது குறிப்பிடதக்கது
பாஜக முழு இந்து கட்சியோ இல்லை சங் பரிவார் கூட்டமோ அல்ல, இஸ்லாமியரும் அங்கு உண்டு
அந்த ஆரிப் இஸ்லாமியரின் மேம்பாட்டுக்கு பாஜகவில் இருந்து உழைத்தார், முத்தலாக் விவகாரத்தில் பாஜகவின் பக்கம் பெரும் பலமாய் நின்றார்
பாருங்கள், இது பாஜகவின் இரும்பு ஆட்சிதான் ஆனால் ஐநா சபை தூதர் முதல் கேரள ஆளுநர் வரை இஸ்லாமியரே
ஆரிப் கேரள கவர்ணராக நியமித்து பாஜக எல்லா மதத்தாருக்குமான கட்சி என என்கின்றது அக்கட்சி
அப்படியே தமிழிசை அக்காவினை கவர்ணராக்கி இது எல்லா சாதிக்குமான கட்சி கூட என்கின்றது
ஆக பாஜக சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி எனும் பிம்பத்தை மிக வேகமாக பூண்டு வருகின்றது என்பது புரிகின்றதல்லவா?
அட்டகாசமான அரசியல் இது..

தமிழகத்திலும் தமிழக பாஜகவில் இனி மாற்று மதத்தினர் வரலாம் , பெரும் உயரம் அடையலாம்
வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது.