அப்பாச்ச்சி ரக ஹெலிகாப்டர்கள்
இந்திய விமானபடையில் அப்பாச்ச்சி ரக ஹெலிகாப்டர்கள் சேர்க்கபட்டிருப்பது கூடுதல் பலம், 8 ஹெலிகாப்டர்கள் சேர்க்கபட்டிருக்க்கின்றன

எனினும் இது போதாது, மிகபெரும் எல்லையினை பாதுகாக்க வேண்டியதால் மேலதிக அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் வேண்டும், அந்த ரஷ்ய எம் 17 ரக ஹெலிகாப்டர்களை பழைய இரும்புக்கு போட வேண்டும்
இன்னும் சில நாட்களில் ரபேல் விமானத்தின் முதல் செட் வந்து சேரும் என்கின்றார்கள், வரட்டும்
எதுவந்தாலும் இந்த காயலான் கடை சரக்கான 1970களின் மாடலான மிக் ரக விமானங்களை கடாசமாட்டோம் என இந்தியா அடம்பிடிப்பது சரியல்ல
சாதாரண காலங்களிலே விபத்துக்குள்ளாகும் ரகம் அது, யுத்தகாலமென்றால் என்னாகும்
ஆனால் ரஷ்யா தான் சம்பாதிக்க அதை அப்படி செய்யலாம் இப்படி செய்யலாம் என சொல்லி ஏதோ செய்கின்றது, ரஷ்யாவினை மீறி மிக் ரகத்தை இந்தியாவாலும் கைவிட முடியவில்லை
ஏதாவது தந்திர முடிவெடுத்து மிக்ரக பழைய விமானங்களை பேரிட்சம் பழம வாங்க கொடுத்துவிட்டு மாற்றீடாக நல்ல விமானங்களை பயன்படுத்தலாம்
அரசுக்கும் திட்டமிருக்கும் விரைவில் அது மாற்றபடும் என எதிர்பார்ப்போம்