நல்ல ராஜதந்திர நகர்வு இது

மோடி ரஷ்யா சென்றிருக்கின்றார், பலர் மாஸ்கோ என சொல்லி கொண்டிருக்கின்றார்கள். அப்படி அல்ல மாஸ்கோ காஷ்மீர் என்றால் மோடி சென்றிருக்கும் விலாடிவோஸ்டாக் நகரம் கன்னியாகுமரி

ஆம் பரந்து விரிந்து உலகின் மிகபெரிய நாடாக விளங்குவது ரஷ்யா ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் அரக்கன் போல விழுந்து கிடக்கும் நாடு அது பெரும்பாலும் பனி பாலைவனம்

கிழக்கே அவர்கள் எல்லையினை தாண்டி கொஞ்ச தூரத்தில் ஜப்பான் வடகொரியா வரும், அதையும் தாண்டினால் அமெரிக்கா

இப்பொழுது மோடி சென்றிருக்கும் நகரம் வடகொரிய சீன ஜப்பானிய எல்லையில் உள்ளது, அங்கு ரஷ்யாவின் கப்பல் கட்டும் தளம் உள்ளது அதை மோடி பார்வையிட்டார்

இனி பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வார்

மோடி புட்டீன் சந்திப்பில் காஷ்மீரை பற்றி காமெடிக்கு கூட பேசவில்லை என்பது இந்தியாவின் வெற்றி, மாறாக சந்திப்பு நடந்தபொழுதே ஐ.நா சபையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பலுசிஸ்தானிலும் பாகிஸ்தான் மனித உரிமையினை மீறுகின்றது என்ற குற்றசாட்டு எழுப்பபட்டது தற்செயலாக இருக்கலாம்

புட்டீன் மோடி சந்திப்பில் ஏ,கே 203 ரக துப்பாக்கிகளை இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரிப்பது 5ம் தலைமுறை ஹெலிகாப்டர்களை இந்தோ ரஷ்ய ஹெலிகாப்டர் நிறுவணம் கூட்டாக தயாரிப்பது மற்றும் ரஷ்யாவிற்கான உதிரி பாகங்களை மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியா தயாரிப்பது போன்றவை கைசாத்தாயின‌

மோடி ரஷ்யா சென்றிருக்கின்றார், பலர் மாஸ்கோ என சொல்லிகொண்டிருக்கின்றார்கள். அப்படி அல்ல மாஸ்கே காஷ்மீர் என்றால் மோடி சென்றிருக்கும் விலாடிவோஸ்டாக் நகரம் கன்னியாகுமரி

ஆம் பரந்து விரிந்து உலகின் மிகபெரிய நாடாக விளங்குவது ரஷ்யா ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் அரக்கன் போல விழுந்து கிடக்கும் நாடு அது பெரும்பாலும் பனி பாலைவனம்

கிழக்கே அவர்கள் எல்லையினை தாண்டி கொஞ்ச தூரத்தில் ஜப்பான் வடகொரியா வரும், அதையும் தாண்டினால் அமெரிக்கா

இப்பொழுது மோடி சென்றிருக்கும் நகரம் வடகொரிய சீன ஜப்பானிய எல்லையில் உள்ளது, அங்கு ரஷ்யாவின் கப்பல் கட்டும் தளம் உள்ளது அதை மோடி பார்வையிட்டார்

இனி பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வார்

மோடி புட்டீன் சந்திப்பில் காஷ்மீரை பற்றி காமெடிக்கு கூட பேசவில்லை என்பது இந்தியாவின் வெற்றி, மாறாக சந்திப்பு நடந்தபொழுதே ஐ.நா சபையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பலுசிஸ்தானிலும் பாகிஸ்தான் மனித உரிமையினை மீறுகின்றது என்ற குற்றசாட்டு எழுப்பபட்டது தற்செயலாக இருக்கலாம்

புட்டீன் மோடி சந்திப்பில் ஏ,கே 203 ரக துப்பாக்கிகளை இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரிப்பது 5ம் தலைமுறை ஹெலிகாப்டர்களை இந்தோ ரஷ்ய ஹெலிகாப்டர் நிறுவணம் கூட்டாக தயாரிப்பது மற்றும் ரஷ்யாவிற்கான உதிரி பாகங்களை மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியா தயாரிப்பது போன்றவை கைசாத்தாயின‌

இதுபோக முக்கியமான திட்டத்தை கையில் எடுக்கின்றார் மோடி, அதாவது ரஷ்ய கிழக்கு நகரமான விளாடிவோஸ்டோக்குக்கும் தமிழக சென்னைக்கும் நேரடி கப்பல் போக்குவரத்து தொடங்கபடும் என்கின்றார்

இது நாட்டின் கிழக்கு துறைமுகங்களை, சென்னை உட்பட பல துறைமுகங்களை வலுபடுத்தும் அப்படியே தென்சீனகடலில் சீனாவின் அட்டகாசத்தை குறைக்கும்படி இந்திய கப்பலும் இனி பயணிக்கும்

நல்ல ராஜதந்திர நகர்வு இது

2001ல் மோடி குஜராத் முதல்வராக வாஜ்பாயுடன் ரஷ்யா சென்றார் அப்பொழுது புட்டீனும் வாஜ்பாயும் கைசாத்திட்டார்கள்

மோடி நாட்டாமை பசுபதி போல ஓரமாக நின்றார்

இப்பொழுது அவரே நாட்டாமையாக புட்டீனுடன் அமர்ந்திருக்கின்றார், இதை அவரே சொல்லி டிவிட்டும் செய்து கண்களை துடைக்கின்றார்

ஏழைதாயின் மகனுக்கு முன்னாள் பொதுவுடமை பூமி சில நினைவுகளை கொடுத்திருக்கின்றது

மிக் 35, சு 57 பற்றி பேச்சு இல்லை. எஸ் 400 ஏற்கனவே ஒப்பந்தம் ஆயிற்று, ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா கப்பல் மேற்கு ரஷ்யாவில் பழுதுபார்க்க படுகின்றது

ஆக விரைவில் ஏகே 203 எனும் நவீன துப்பாக்கிகள் இங்கு வரும்

அது வந்தபின் என்னாகும்?

ஏற்கனவே புலிகளிடம் ஏ.கே 72 சுட்டு பழகிய அங்கிள் சைமன் இந்தியாவிலே முதன் முதலில் ஏ.கே 72 ரக துப்பாக்கியினை தொட்டு சுட்ட ஒரே நபர் என அறியபடுகின்றார்

யார் சொன்னார் என்றால் அவர்தான்

இனி அந்த பெருமையினை அவர் இழப்பார், ஏ.கே 203 எனும் துப்பாக்கியினை இந்திய வீரரில் ஒருவர்தான் முதலில் சுடுவார்

துரதிருஷ்டவசமாக ஏக 230 ரக எனும் அதிஅதி அதி நவீன துப்பாக்கியினை கொடுத்து சீமானை சுடவைக்க புலிகள் இப்பொழுது இல்லை