மிஷன் மங்கள்

மிஷன் மங்கள் எனும் இந்திபடம் வெளிவந்து வசூலை அள்ளிகொண்டிருக்கின்றது

இந்தியாவில் விஞ்ஞான படங்கள் வராது எனும் பிம்பத்தை அடித்து உடைத்து இஸ்ரோவின் கதையினை அதாவது இஸ்ரோ செவ்வாய்கிரகத்தில் கால்பதிப்பது போல் மகா சுவாரஸ்யமாய் எடுத்திருக்கின்றார்கள் என செய்திகள் சொல்கின்றன‌

பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் இஸ்ரோவின் உண்மை கதை பாதி, கற்பனை பாதி என கலந்து கட்டி அடித்து வென்றிருக்கின்றார்கள்

வித்யாபாலன், டாப்சி, நித்யா மேனன் எல்லோரும் சயின்டிஸ்ட் வேடத்தில் வந்து படத்தை தூக்கி நிறுத்தியிருக்கின்றார்கள்

படம் பெரும் பரபரப்பாக ஓடிகொண்டிருக்கின்றது

தமிழகம் எப்பொழுதுமே இந்தியாவுடனும் அதன் யதார்த்தத்துடனும் ஒட்டாது என்பதால் இது “வெறித்தனம்” என சொறித்தனமாக முணங்கிகொண்டிருக்கின்றது

இங்கு அதாவது தமிழகத்தில் இந்தி தெரியாததும் இன்னும் அறிவியல் படங்கள் புரியாததும் இப்படத்தை பற்றி பேசவே வைக்கவில்லை

அப்படி ஒரு படம் வந்ததே தெரியாது

எனினும் டப்பிங் புலிகள் விரைவில் இதை தமிழில் டப் செய்யலாம்

ஆனால் சங்கம் இந்த பொன்னான வாய்பினை விடுமா?

தலைவி குஷ்பு லண்டனில் இருந்து திரும்பியதும் அவரை கதாநாயகியாக விஞ்ஞான கோலத்தில் நடிக்க வைத்து “செவ்வாய் திட்டம்” என தமிழில் சங்கம் தயாரிக்கும்

அதில் பிரபல பெண் விஞ்ஞானிகளே அசந்து போகும் அளவுக்கு செவ்வாய் கிரக விஞ்ஞானியாக வாழ்வார் எங்கள் செவ்”வாய்” தலைவி