இப்படி எல்லாமா ஒரு அப்பாவி மனநிலை இருக்கும்
இந்த கமாண்டோவின் கமெண்டை பார்த்ததும் அனகோண்டாவினை தனியாக பார்த்துவிட்டவன் போலவும், எரியும் அமேசான் தீயில் தனியாக சிக்கிகொண்டவன் போல அஞ்சி ஒடுங்கி இருக்கின்றேன்
திடீரென நம்முன்னால் டைனோசர் வந்து நின்றால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கின்றது அதிர்ச்சி
இதனை எல்லாமா ஒருவன் மனமார நம்புவான்? இப்படி எல்லாமா ஒரு அப்பாவி மனநிலை இருக்கும்
உகாண்டா எப்படிபட்ட நாடு? ஆப்ரிக்காவிலே பின் தங்கியநாடு
அந்நாட்டில் வரிகிடையாது என்பது உண்மைதான், ஏனென்றால் வரி கேட்டால் மக்கள் துப்பாக்கியால் சுடுவார்கள், தமிழரை விட அவர்கள் மகா மோசம்
பஸ்ஸில் இடமில்லை என்பதற்காக கூட துப்பாக்கி எடுத்தும் சுடும் மக்கள் உள்ள நாடு அது
ஆப்ரிக்காவின் பின் தங்கிய நாட்டை அதுவும் வளரும் நாடு எனும் அந்தஸ்தை கூட எட்டபெரும் போராட்டம் நடக்கும் நாட்டில் எல்லாம் இலவசம் என அப்பாவியாக இவர் நம்பினால்.. அய்யகோ இவரை நினைத்து நெஞ்சமே நடுங்குகின்றது
என்னது பொலிவியாவா?
சே காலத்தில் தொடர்ந்த யுத்தம் இன்னும் முடியவில்லை அந்த தென்னமெரிக்க நாடு போதை வியாராபம் ஒன்றை நம்பியே இயங்குகின்றது
கனடா பிரதமர் டிரம்ப் மனைவிக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான் அதற்காக அவரை கல்யாண புரோக்கர் அளவிலா கொண்டு நிறுத்துவது?
இவ்வளவு பணக்கார நாடுகளை சொன்ன நீர் ஆப்கான், எத்தியோப்பியா, சூடான், சோமாலியா, மெக்ஸிகோ, கொலம்பியா என இன்னபிற நாடுகளின் பணக்கார சொகுசு வாழ்க்கையினை அடுத்த பதிவில் மறக்காமல் தரவெண்டும் சரியா..
அதை படித்து பல்லாயிரம் பேர் பயனடையட்டும்
சரி அது இருக்கட்டும் நெஞ்சை பிடித்து கொண்டு கேட்கின்றேன் , என்னது ஐந்து லட்சம் டாலரா?
ஏதப்பா முருகன் படத்து டாலரா?
அப்பனே டாலர் என்றால் என்னவென்று தெரியுமா? அமெரிக்க அதிபருக்கே அந்த சம்பளம் இராதேப்பா
பழைய நாகையா பாணியில் கேட்கின்றேன், நடிகை நாகம்பா பாணியில் கேட்கின்றேன்
“யாரய்யா நீ, சொல் உண்மையினை சொல், யார் பெற்ற செல்வமடா நீ, எங்கே இருந்தாய் இவ்வளவு நாளும்”
தயவு செய்து நாம் தமிழர் இல்லை இப்பொழுதெல்லாம் திமுகவும் அப்படி ஆகிவிட்டது
தயவு செய்து அங்கே சென்று இதை எல்லாம்
சொல், காருக்கு வாடகை மற்றும் சிபாரிசு கடிதம் எல்லாம் தருகின்றேன்
அங்கே கொள்கை பரப்பு செயலாளருக்கான எல்லா தகுதியும் உனக்கு இருக்கின்றதய்யா
தயவு செய்து பாவியும் அடிமுட்டாளுமான எம்மை விட்டு அகன்றுவிடு, உன் அறிவுக்கும் புனிதமான கொள்கைக்கும் இந்த ஏழை பாவியின் குடிசையில் இடமே இல்லையப்பா இடமே இல்லை..”
