வரலாறு திமுகவுக்கும் திரும்பிவிட்டதோ என்னமோ..

எதற்கெடுத்தாலும் தளபதி அவருக்கு பதில் சொல்லமாட்டார், இவருக்கு பதில் சொல்லமாட்டர், கண்டவனுக்கும் பதில் சொல்லி அவர் தரத்தை குறைக்கமாட்டார் என திமுக தும்பிகள் புளகாங்கிதம் அடைகின்றன‌

சரி தளபதி இம்ரான்கானுக்காவது பதில் சொன்னாரா என்றால் அதுவுமில்லை, ஒருவேளை இம்ரான்கானும் அவர் அளவுக்கு இல்லையோ என்னமோ

மிஸ்டர் டிரம்ப் & மிஸ்டர் ஜின்பெங் உங்களுக்கும் இதுவரை தளபதி பதில் அளிக்கவில்லை என்பதால் உங்கள் தகுதி என்பதை நீரே இனி முடிவுசெய்து கொள்ளவும்

எம்ஜி ராமசந்திரனின் கடைசி காலத்தில் அவரை பேசவிடாமல் தொப்பி போட்டு, பல்செட் போட்டு கண்ணாடி போட்டு ஒரு பொம்மைக்கு வைத்திருந்தனர்

பத்திரிகை சந்திப்பு, சிக்கலான கேள்விகள் என எதுவும் அவரிடம் கேட்கபடாமல் பார்த்துகொண்டு, “தலைவரை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி உண்டு?” என்பதோடு விஷயத்தை முடித்தார்கள்

அந்த யழவு வரலாறு திமுகவுக்கும் திரும்பிவிட்டதோ என்னமோ..