பழைய மரபை திருப்பும் பள்ளி

இந்த பள்ளி நெல்லைமாவட்டம்
வள்ளியூரில் இருக்கின்றது, இவர்கள் பாஜகவினை மனம்குளிர செய்ய இம்மாதிரி செய்தார்களா இல்லை வேறு விவகாரமா என தெரியவில்லை

பெரியவர்களை வணங்குதல் மரபு

ஒன்று முறைப்படி ஆசிரியர் எழுந்து நின்று மாணவர்கள் வணங்க வேண்டும், அவர்கள் ஆசியளிக்க வேண்டும்

இல்லாவிட்டால் குனிந்து மாணவர்கள் தலையில் ஆசிவாங்க வேண்டும்

இதெல்லாம் திட்டமிட்ட நாடகம் போல தெரிகின்றது

திராவிட சிங்கங்கள் இதை எப்படி அனுமதித்தன, ஏன் அமைதி காக்கின்றன என்பது தெரியவில்லை

விஷயம் கணிக்க எளிது

இதுவே மாணவருக்கு நீல உடைக்கு பதிலாக காவிஉடையும் அந்த ஆசிரியர் காவியும் தாடியும் ருத்திராட்சமும் கமண்டல சகிதம் இக்காட்சி இருந்தால் இந்நேரம் குதிப்பார்கள்

தன்மானம், சுயமானம் இன்னபிறமானம் போயிற்று மனுநீதி வந்துவிட்டது என குதிப்பார்கள்

இது கிறிஸ்தவ பள்ளி என்பதால் சத்தமில்லை

பழைய மரபை திருப்பும் பள்ளிக்க்கு எம்மை பொறுத்தவரை நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

ஆனால் ஆசிரியர் எழுந்து நின்று மரியாதையினை ஏற்றிருத்தல் வேண்டும்

இனியாவது சாஸ்திர சம்பிரதயபடி பிரம்ம முகூர்த்ததில் கிழக்கு பார்க்க நின்று கொண்டு நின்ற கோலத்தில் ஆசிரியர்கள் மாணவர்களை வாழ்தட்டும்

நெடுஞ்சாண்கிடையாக கிடக்கும் மாணவர்கள் உரிய தட்சனை கொடுக்காமல் இப்படி கிடந்தால் ஆசி கிடைக்காது

அதனால் அடுத்தமுறை தட்டில் பூ, பழம், வெற்றிலை, பட்டுசேலை எல்லாம் வைத்து வணங்குமாறு மாணவர்களை கேட்டு கொள்கின்றோம்

செய்வதை ஒழுங்காக செய்யவேண்டும்

வள்ளியூர் பகுதியின் அனைத்து பள்ளி,கல்லூரி, மருத்துவமனை, என எல்லா இடமும் இந்த கலாச்சாரம் வந்தால் மிக்க நல்லது

பெரும் கலாச்சார திருப்பத்தை திருப்பியிருக்கும் மெர்ஸி பள்ளிக்கு வாழ்த்துக்கள்

ஆக முன்பு ஜெயலலிதாவினையும் குருவாக நினைத்துத்தான் அவர்கள் காலில் விழுந்திருகின்றார்கள், தமிழகம்தான் அவர்களை தவறாக புரிந்திருக்கின்றது

அதிமுகவினருக்கு அவ்வளவு குருபக்தி இருந்திருக்கின்றது, அந்த பக்தியின் பலனே அவர்கள் நாடு நாடாக சந்தோஷமாக சுற்றிகொண்டிருக்கின்றார்கள்

(இதே காட்சிகள் இந்து பள்ளிகள் குறிப்பாக விவேகானந்தா கேந்திரா சாலைகளில் நடந்திருந்தால் இந்நேரம் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல‌

இது கிறிஸ்தவபள்ளி என்பதால் சிக்கல் இல்லை, ஆக தமிழர் கலாச்சார மீட்பை கிறிஸ்தவ பள்ளிதான் செய்ய வேண்டும்)