அம்மாதிரி உறவும் வேண்டாம், நண்பர்களும் வேண்டாம்

மிக மிக கொடுமதி படைத்தோர், வார்த்தையில் சொல்லமுடியா பிறவிகள் எல்லாம் திமுகவில்தான் இருந்திருகின்றன‌

அதுவும் நண்பர்கள் என உரிமையோடு பழகியிருகின்றன‌

காலம் அவர்களை அடையாளம் காட்டிவிட்டதில் மகிழ்ச்சி, இப்படிபட்ட கயவர்களுடன் ஒருகாலத்தில் பழகியதை எண்ணி மனம் மிகுந்த சஞ்சலபடுகின்றது

நட்பு என்பது அரசியலை தாண்டியது என்றிருந்தேன், அவர்களோ அரசியலுக்காகத்தான் நட்பு என்றிருந்தது இப்பொழுதுதான் புரிகின்றது

நமக்கு ஒருவிஷயம் தான் புரியவில்லை, நாடு என்பதையும் மதங்களின் நல்ல விஷயங்களையும் தவிர நாம் எதையும் எழுதவில்லை

எந்த மதத்தையும் தாழ்த்தவில்லை, தனிபட்ட முறையில் ஆபாசமாகவோ இல்லை தனிபட்ட வாழ்வினையோ எந்த தலைவனையும் விமர்சிக்கவுமில்லை

எவ்வளவு கண்ணியம் காக்க முடியுமோ அவ்வளவு காக்கின்றோம்

ஆயினும் நம்மை சங்கி என சொல்லிவிட்டு செல்கின்றார்கள்

அவர்களின் மனநிலையிலே நம்மையும் சிந்திக்க சொன்னால் எப்படி?

புரிகின்றது, அவர்கள் எல்லாம் மதம், கட்சி எனும் குறுகிய வட்டத்தில் இருக்கின்றார்கள், அதில் நம்மையும் சங்கிலி போட்டு கட்ட பார்க்கின்றார்கள், நாம் சிக்கவில்லை

நாம் பரந்த வானத்தில் பறக்கவிரும்புகின்றவர்கள், மதமோ கட்சியோ நம்மை கட்டிபோடமுடியாது

ஆனால் குறுகிய வட்டத்தில் நின்றுகொண்டு இதுதான் சரி என்கின்றார்கள், அதை கடக்க நினைத்தால் சங்கி என்கின்றார்கள்

அப்துல்கலாமையே பழிப்பவர்களுக்கு நாமெல்லாம் எம்மாத்திரம்?

பெரும் அவமான சொற்களை வீசிவிட்டு கடக்கும் முன்னாள் நண்பர்களுக்கு நன்றி

அரசியல் ஒன்றுக்காகவா நட்பு பாராட்டினீர்கள்?

இதற்கும் உலகின் ஆதிகால தொழிலுக்கும் என்ன வித்தியாசம்?

ஆனால் அந்த தொழிலாளருக்கு மனசாட்சி உண்டு.சில நியாய தர்மங்கள் உண்டு, வறுமை ஒன்றினாலே அதில் சிக்குவார்களே தவிர மனமால் நல்லவர்கள்

இந்த கொடுமதியாளரை ஒப்பிடும்பொழுது அவர்களுக்கு கோவில் கட்டி கும்பிடலாம்

இதனால் சொல்கின்றோம், அரசியல் , மதம் ஒன்றுக்காக எம்மிடம் நண்பர் என சொல்பவர் யாராயினும் கிளம்பிவிடுங்கள்

அம்மாதிரி உறவும் வேண்டாம், நண்பர்களும் வேண்டாம்