யாராவது தடுத்தார்களா?

மன்மோகன் சிங் நல்ல நாட்டுபற்றாளர்
என்றால் இத்தேசம் மேல் அக்கறை உள்ளவர் என்றால் ஏன் பாஜக அரசில் அமைச்சராக வந்து பணியாற்ற கூடாது?

யாராவது தடுத்தார்களா?

மாறாக சோனியாவின் அடிமையாக பினாமியாக நின்றுதான் நாட்டுபணி செய்வேன் பொருளாதாரத்தை தாங்குவேன் என அடம்பிடித்தால் எப்படி?

நல்ல வீரன் எந்த ஆட்சியில் இருந்தாலும் துப்பாக்கி தூக்குவதே என் பணி என எல்லையில் நிற்பான்

அவன் கட்சி அரசியல் பார்த்தால் நாட்டில் பாதுகாப்பு இராது

மன்மோகன் போன்ற திறமையாளர்கள் கட்சி பார்க்காமல் பணியாற்ற முன் வந்தால் தேசத்துக்கு நல்லது

காங்கிரஸ் ஆட்சி என்றால் மட்டுமே தேசபணி செய்வேன் என அடம்பிடிப்பது திறமையான நிர்வாகிக்கு அழகே அல்ல