மோடி அவசரமாக பெங்களூர் வருகின்றார்

ரஷ்யாவில் இருந்து பல்லாயிரம் கிமீ பயணம் செய்த மோடி அவசரமாக பெங்களூர் வருகின்றார்

ஆம் நாளை சந்திராயன்2 நிலாவில் தரையிறங்க வேண்டும், கொஞ்சம் சிக்கலான சவாலான விஷயம்தான்

அதை விஞ்ஞானிகள் செய்யும் பொழுது மோடியும் அவர்கள் நடுவில் இருந்து பார்க்க போகின்றாராம்

இது விஞ்ஞானிகளின் கடமையும் வேலையுமாகும். வேலை அவர்களிடம் ஒப்படைக்கபட்டிருகின்றது அவர்கள் செய்வார்கள்

இவர் உள்ளே புகுந்து பார்க்கும் அவசியம் இல்லை எனினும் செல்கின்றார், சர் ஆர்வம் மிக்கவர் செல்லட்டும்

அந்த விண்வெளிகட்டுபாட்டு நிலையத்துக்கு செல்லும் மோடி சில மாணவர்களையும் அழைத்து செல்கின்றார்

முதலில் விண்கலம் நல்லபடியாக தரை இறங்கட்டும், விஞ்ஞானிகள் உழைப்பு வெற்றிபெறட்டும்

தேசன் தன் பெருமையினை நிலைநிறுத்தட்டும்

எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையில் சில வடக்கத்திய பாஜக அழிச்சாட்டிய கோஷ்டி சொல்லபோவதை நாமும் சொல்லிவிடலாம்

“அமாவாசை அன்று ராக்கெட்டை செலுத்தினால் நிலாவில் தரையிறங்க முடியாது என்பதால், நிலாவே இருக்காது என்பதால் வளர்பிறையில் செலுத்தி பவுர்ணமி பக்கமாக நிலாவில் சந்திராயனை இறக்கினார் மோடி

இனி அமாவாசை வருவதற்குள் ராக்கெட்டை திருப்பி சந்திராயனை கொண்டுவந்துவிடுவார், இல்லாவிட்டால் நிலாவோடு சேர்ந்து சந்திராயனும் மறைந்தே விடும்”