காந்திமேல் அக்காலத்தில் இருந்து வரும் விமர்சனங்கள்
காந்திமேல் அக்காலத்தில் இருந்து வரும் விமர்சனங்கள் பல உண்டு சிலவற்றை சொல்லிவிடலாம்
இந்தியாவில்தான் பிறந்து வளர்ந்தார் காந்தி, லண்டனுக்கு படிக்க சென்று இங்குதிரும்பினார் அதுவரைக்கும் அவருக்கும் பிரிட்டிஷ்காரனுக்கும் மோதல் இல்லை
மோதல் தென்னாப்ரிக்க ரயிலில் அவரை வெள்ளையன் இழுத்து போட்டதில் தொடங்கியது, அதில்தான் போராட்டத்திற்கு வந்தார்
அந்த போராட்டமும் தென்னாப்ரிக்க விடுதலைக்கு அல்ல, சில உரிமைளை பெறத்தான் நடத்தினார் அவை கிடைத்தபின் இந்தியாவுக்கு வந்தார்
இங்கு ஆளாளுக்கு ஒவ்வொரு மூலையில் போராடிகொண்டிருந்தவர்கள் அவர் தலமைக்கு வந்தபின் அவருக்கு வழிவிட்டு ஒதுங்கினர் அல்லது ஒதுக்கபட்டனர்
யாரும் துப்பாக்கி தூக்காமல் அதே நேரம் நேரடி போராட்டமும் நடத்தாமல் ஏதோ செய்துகொண்டிருந்தார்
உரிமை போதும் சுதந்திரம் பின்பு பார்த்துகொள்ளலாம் எனும் வகையில் அவரின் அணுகுமுறை இருந்தது
தேசம் பிரியவும் எரியவும் தயாரான காலங்களில் அவர் முதிர்ந்த வயதில் பிரம்மசரியம் காக்க முடியுமா? இல்லறத்தை தவிர்க்கலாமா என என்னென்ன ஆய்வுகளையோ செய்துகொண்டிருந்தார்
ஒருமாதிரியான குணத்துக்கு மாறியிருந்தார்
நாட்டின் உற்பத்தி பாதிக்கவோ இல்லை உலகபோர் காலங்களில் வெள்ளையனுக்கு நெருக்கடி கொடுக்கவோ அவர் எண்ணவில்லை
இரண்டாம் உலகபோர் மட்டும் நடைபெறாவிட்டால் இந்திய சுதந்திரம் காந்தி காலத்தில் கிடைத்திருக்காது
காந்தி சம்பாதித்த அதிருப்திகள் ஏராளம்
உச்சமாக ஜின்னாவினை அவர் நினைத்திருந்தால் முடக்கியிருக்கலாம், பாகிஸ்தான் பிரிவினையினை தடுத்திருக்கலாம் அதை செய்யவில்லை
ஏதேதோ சொல்லி பார்த்தார் அத்தோடு விட்டுவிட்டார்
அது தவறு , அரசியல் ரீதியாக மாபெரும் தவறு
ஒருநாடு உருவாகி அது தனக்கு எதிராக திரும்பும் சாத்தியம் இருந்தால் அதை உருவாக விடவே கூடாது
அதை அமெரிக்க உள்நாட்டுபோர் சொன்னது, லிங்கன் அதை சாகசமாக தடுத்து அமெரிக்கா உடையாமல் காத்தார்
ஒருவேளை உடைபட்டிருந்தால் இந்நேரம் கருப்பர் வெள்ளையர் தேசமாக இரு நாடுகள் மோதிகொண்டிருக்கும் இந்த வல்லரசு வந்திருக்காது
பாலஸ்தீனை உள்ளே வைத்து இஸ்ரேல் அடைகாப்பது அப்படித்தான்
எதிரி உனக்கு எதிராக வருவான் என்றால் அவனை ஏன் வெளியே விடவேண்டும்? உள்ளே வைத்து கண்காணி என்பது ராஜநீதி
காந்தி அதில் தோற்றார்
அதுவும் இஸ்லாமிய நாடு ஒன்று உதித்து அது பெரும் கலவரத்தில் ஈடுபடும் பொழுது இங்கிருக்கும் இந்துக்களை அமைதி காத்து 50 கோடி கொடுங்கள் என்பதெல்லாம் வேறு வகை கொடுமை
அதுவும் இஸ்லாமிய தேசம் உருவான பின் இத்தேசம் மட்டும் சமயசார்பற்ற தேசம் என்பது இங்குள்ள மக்களின் மனதை நோகடித்தது
இந்நாட்டு இந்து சமூகம் தனக்கு யாருமில்லை என அஞ்ச தொன்றியது அப்பொழுதான்
இஸ்லாமியருக்கு ஜின்னா சாதித்து காட்டிவிட்டான், எங்களுக்கான தலமை எது என இந்து சமூகம் கேட்டபொழுது அந்த கேள்வியினை காந்தி தவிர்த்தார்
அவர் அப்படி செய்திருக்க கூடாது
சுருக்கமாக சொன்னால் இந்துக்கள் தன்னை போல பெருந்தன்மையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது சரியும் அல்ல
மொத்தத்தில் இந்த தேசத்து மக்களின் உணர்வுகளை அவர் மதிக்க தவறினார், பல கொலைமுயற்சிகளில் சிக்கினார்
கோட்சேவுக்கு வெற்றிகிடைத்தது
நிச்சயம் கோட்சே ஒரு கிறுக்கன், தானாக சாகும் நிலையில் இருந்த முதியவரை சுட்டு கொன்றது பைத்தியகாரதனமான செயல்
விட்டால் காந்தி தானகவே இறந்திருப்பார் அல்லது வேறு யாரும் தள்ளியாவது விட்டிருப்பார்கள்
அந்த பழியினை வலிய சென்று ஏற்றான் கோட்சே, இந்த ஆர்.எஸ்.எஸ் , இந்துமகா சபை எல்லாம் கொஞ்சம் விவரமில்லா கோஷ்டி, அவர்கள் உருவாக்குவது எல்லாம் உருப்பாடாதவர்கள் என பலர் சொல்வது இதனால்தான்