பிரிட்டன் குழம்பி தவிக்கின்றது
பிரிட்டன் குழம்பி தவிக்கின்றது , ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளிவரவேண்டும் என்ற கோஷத்துடன் துண்டை உதறி தோளில் போட்டு கிளம்பிய நாட்டாமை இப்பொழுது மரத்தில் முட்டிகொண்டு என்ன செய்ய என தெரியாமல் தவிகின்றார்
ஆம், அது பிரிட்டனுக்கு சிக்கலாகிவிட்டது, அதிலிருந்து விலகும் பட்சத்தில் பிரிட்டனுக்குள் காய்கறி முதல் எதுவும் வராது, பிரிட்டனின் பொருளும் ஏற்றுமதியாகாது
பிரிட்டனில் இந்த சிக்கல் வந்ததற்கு காரணம் ஐரோப்பிய யூனியனில் இருப்பதால் ஏராளமானோர் உள்ளே வருகின்றார்கள் இதனால் பிரிட்டனின் மக்களுக்கு வேலை இல்லை பொருளாதாரமில்லை பிரிட்டனில் வந்தேறிகள் ஆக்கிரமிப்பு என்றுதான் விலக நினைத்தார்கள்
ஆனால் விலகுவது சுலபபாக இல்லை, விலகினால் பெரும் சிக்கலை சந்திப்போம் என கடுமையாக யோசிக்கின்றார்கள்
இது கடும் அரசியல் நெருக்கடியினை ஏற்படுத்திவிட்டது இரு பிரதமர்கள் இது வேலைக்காகாது என ஓடிவிட்ட நிலையில் அதிரடி பிரதமர் பொரிஸ் ஜாண்சன் வந்தாலும் சிக்கல் தீரவில்லை
தந்திரத்தில் ஊறிய பிரிட்டன் நாங்கள் வெளியேறுகின்றோம் ஆனால் சில ஒப்பந்தங்களை போட்டுகொள்ளலாம் என ஐரோப்பிய யூனியனை இழுக்கின்றது
அதன் தந்திரம் என்னவென்றால் பிரிட்டன் ஐரோப்பா முழுக்க வியாபாரம் செய்யலாம் ஆனால் மற்ற ஐரொப்பிய நாடுகள் பிரிட்டன் பக்கமே வரகூடாது எனும் அளவில் இருப்பதால் “ஓஹோ உங்களுக்கு மட்டும்தான் அறிவு உண்டோ, எங்களுக்கு இல்லையோ” என ஜெர்மன் முதலான நாடுகள் ஒப்பந்தத்துக்கு வர மறுக்கின்றன
ஆனான பிரிட்டன் இனி உள்ளே சென்றால் அவமானம் செல்லாவிட்டாலும் தாக்குபிடிக்க முடியாது என தவிகின்றது
எப்படிபட்ட பிரிட்டன், உலகிலே தங்கம் அதிகமாக கையில் வைத்திருக்கும் நாடு முதல் இன்னும் ஏகபட்ட வாய்ப்புகள் உண்டு
அவர்களே தனித்து நிற்க தயங்குகின்றார்கள்
இதில் தனிதமிழ்நாடாம், கிழித்து எறிந்துவிடுவார்களாம்