ரஃபேல் விமானத்தின் இரண்டாவது சுற்று ஆட்டம் விரைவில் தொடங்கும்
ரபேல் விமானங்களின் முதல் தொகுப்பு அடுத்த வாரம் இந்தியா வர இருக்கிறது இந்தியாவின் அடையாளமான கொடி எல்லாம் பூசப்பட்டு பிரான்சில் சோதனை நடைபெறுகிறது இந்திய விமானிகளுக்கும் பொறியியலாளர்கள் எனும் கோஷ்டிக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது
பஞ்சாபின் விமானப்படை முகாமுக்கு அந்த விமானங்களின் முதல் பகுதி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
ரபேல் விமானங்கள் வருவதைவிட சுவாரஸ்யமான விஷயம் ஒப்புக்கொண்ட விலையிலிருந்து பல பில்லியன் டாலர்களை பிரான்ஸ் குறைந்திருக்கிறது என்கின்றார்கள் இதில் பயிற்சி மெயின்டனன்ஸ் என எல்லாமும் அடக்கம்
ஆக இந்தியா பணத்தை மிச்சப்படுத்தி இருக்கிறது ஆக இதோ நாங்கள் நாட்டின் பணத்தை மிச்சப்படுத்தி விட்டோம் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என பாஜக தன் அரசியலை ஆரம்பிக்கலாம்
ஆக ரஃபேல் விமானத்தின் இரண்டாவது சுற்று ஆட்டம் விரைவில் தொடங்கும் இம்முறை ஆரம்பிக்க போவது பாஜக