சிலைகளை மீட்பதில் வெற்றிபெற்றிருக்கின்றார்

சிலை கடத்தல்காரர்களைத்தான் அவரால் பிடிக்கமுடியவில்லையே தவிர சிலைகளை மீட்பதில் வெற்றிபெற்றிருக்கின்றார் பொன்மாணிக்கவேல்

ஆம், இந்தியாவின் சட்டத்தின் ஓட்டைபடி இங்குள்ள குற்றவாளிகளை அவரால் நெருங்கமுடியவில்லை, ஆற்றாமை கண்ணீரை மட்டும் அவரால் துடைக்க முடிந்தது

ஆனால் தெய்வம் அவருக்கு ஆறுதல் அளித்திருக்கின்றது,” தண்டனையினை என் வசம் விட்டுவிட்டு சிலையினை மட்டும் மீட்பாய் என் அடியவனே என கட்டளையிட்டிருக்கின்றது

கடத்தல் சிலைகள் பல அவரால் மீட்கபடுகின்றன, ஏற்கனவே குஜராத்தில் இருந்து ஐம்பொன் சிலைகள் தஞ்சை கோவிலுக்கு திரும்பியதும், அது வந்ததில் இருந்தே காவேரி சிக்கல் தீர்ந்ததையும் நாமெல்லாம் அறிவோம்

இப்பொழுது ஆஸ்திரேலிய நாட்டு மியூசியம் நடராஜர் சிலையினை திருப்பி கொடுக்க சம்மதித்திருக்கின்றது

அதாவது ஆஸ்திரேலிய மியூசியம் நடராஜ பெருமானின் சிலையினை அமெரிக்க்க கம்பெனியிடமிருந்து வாங்கியதாம்

உரிய ஆவணங்களை அமெரிக்க கம்பெனியிடம் சொல்லி இது கடத்தல் சிலை என உறுதிபடுத்திய இந்தியா அதை ஆஸ்திரேலியாவிடமும் தெரிவித்தது

ஆவணங்கள் சரியாக இருந்ததை கண்ட ஆஸ்திரேலியா அந்த சிலையினை இந்தியாவுக்கு கொடுக்க ஒப்புகொண்டது

இனி டெல்லிக்கு அச்சிலை ஒப்படைக்கபடும் பின் தமிழகத்துக்கு திரும்பும்

இங்கு அதற்குரிய இடத்தில் அது நிறுவபடும்

பொன்மாணிக்கவேல் என்பவரிடம் நாம் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான்

அய்யா இந்த நாட்டு சட்டத்தின் தன்மையும், பல நடைமுறைகளும் குற்றவாளிகளுக்கே சாதகம்

ராஜிவ் கொலையாளியினை கூட தூக்கிலடமுடியா அளவு மெல்லிய மயிலறாகால் வருடுவது போன்ற சட்டம் இவை

இவைகளை வைத்து கொண்டு உங்களால் யாரையும் தண்டிக்க முடியாது, அதில் முயன்றால் உங்களுக்கு தோல்வியே

தயவுசெய்து தண்டிக்கும் உரிமையினை தெய்வத்திடம் விட்டுவிட்டு தெய்வ சிலைகளை மட்டும் திருப்பி கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுங்கள்

இதுவரை 20க்கும் மேற்பட்ட சிலைகளை திருப்பி கொண்டுவந்திருக்கின்றீர்கள், அது இன்னமும் தொடரட்டும்

தாங்கள் தப்பித்தால் போதும் சிலை வந்தால் சிக்கலே இல்லை எனும் நிலையில் மேலிடங்களும் அதிகார வர்கங்களும் உங்கள் பாதைக்கு வராது

தெய்வமே அந்த பாதையினை சமைத்து தரும், முன்னோர்களின் ஆசியும் இன்னும் பல ஆத்ம பலமும் உங்லளை வந்து சேரும்

தயவு செய்து திருடர்களை தேடாதீர்கள் இத்தேசத்தில் அது காற்றை கையில் பிடிப்பதற்கு சமம்

இங்கு எல்லா கிரிமினல்களும் எல்லா கட்சியின் அடியாழம் வரை ஊடுருவியபின் ஒரு நியாயத்தையும் தேசமுடியாது, அதை தெய்வமே தீர்க்கட்டும்

மாறாக தெய்வ சிலைகளை தேடுங்கள், திருப்பி கொண்டுவாருங்கள், அதற்காக அழைக்கபட்டீர்கள் அதை ஒன்றையே செய்யுங்கள்

தெய்வத்தின் பிராப்தமும் அதுவே, தமிழரின் வேண்டுகோளும் பிரார்த்தனையும் அதுவே