இலக்கிய இம்சைகள் என்ன சர்ச்சையினை கிளப்பிவிட்டார்கள்?

இலக்கிய இம்சைகள் என்ன சர்ச்சையினை கிளப்பிவிட்டார்கள்?

இப்பொழுதுள்ள இலக்கியவாதிகளிடம் நடக்கும் போட்டியே யார் மிகபெரிய மெண்டல் என்பதுதான்

அந்த இடத்துக்கு நடக்கும் போட்டிக்கு கீழ்பாக்க மருத்துவர்கள்தான் நடுவராக இருக்கமுடியுமே அன்றி வேறு யாரும் அதற்கு தகுதியானவர்கள் அல்ல‌

மொழியினை கொன்று, இலக்கியம் என்பதன் உருவினையே கொன்று, தெய்வத்தை வடிக்க சொன்னால் கடும் பேய் உருவினை படைத்து வைத்து இதுதான் தெய்வம் வணங்கு என்பார்கள்,

பூவினை வரைய சொன்னால் கள்ளிசெடியினை வரைந்துவிட்டு இது உலகதரம் என்பார்கள்

ஒன்று தலைகீழாக தொங்கும், ஒன்று மல்லாக்க படுத்து கவித்துவம் பிரக்ஞ்சை என சொல்லிகொண்டிருக்கும், ஒன்று ஆன்மீகம் புரிதல் ஞானமரபு என குழப்பும், இன்னொன்று புரியாத மொழியில் தனக்கு தானே பேசும்

மொத்தத்தில் அவர்களுக்குள் அவை என்ன பேசுகின்றன என்பது அவைகளுக்கும் புரியாது, தனக்குள்ளும் புரியாது எனும்பொழுது நமக்கு எப்படி புரியும்?

பொதுவாக இயல்பு வாழ்க்கைக்கும் நடைமுறைக்கும் ஒத்துவரா கனவுலகம் அவைகளுடையது, கிட்டதட்ட மனவியாதி அது

பைத்தியங்களுக்குள் ஒரு நாளும் ஒற்றுமை வராது என்பது போல அவைகளுக்குள்ளும் வராது..

அந்த பைத்தியங்கள் என்ன யழவினை தொடங்கி வைத்ததோ தெரியவில்லை, ஆனால் எதனையோ குதறி வைத்திருப்பது தெரிகின்றது

இதெல்லாம் கீழ்பாக்க மருத்துவர்கள் சிக்கல் என்பதால் நாம் நகர்ந்து விடலாம்