அம்மணியின் பனிமலை சாகசத்தைவிட சாகசமானது இந்த வார்த்தை ஜால விளையாட்டு

பாகிஸ்தானை சேர்ந்தவர் நமீரா, அம்மணி சாகச விரும்பி.

அண்டார்டிக்காவினை அடைந்து பெங்குயினை தழுவுவது, அப்படியே ஆர்டிக் எனப்படும் வடதுருவத்தை அடைந்து பனிகரடியுடன் செல்பி எடுப்பது, எவரெஸ்டை அடைந்து டைவ் அடிப்பது என அதன் சாகசம் அதிகம்

அவரின் சாகசத்தை உணர்ந்த அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவணம் அவரை விண்வெளிக்கு அனுப்ப உறுதியளித்து பயிற்சியளிக்கின்றது

அப்படிபட்ட அம்மணி இந்தியாவின் விண்வெளி சாதனையினை கவனமாக பாராட்டியிருக்கின்றது

என்ன கவனம்?

எல்லோரும் இது இந்திய சாதனை, இந்தியா சாதித்திருக்கின்றது எனும்பொழுது அம்மணி வலுகவனமாக இது தெற்காசியாவின் சாதனை, பூமியின் மானிட இனத்து சாதனை என பதமாக சொல்லிவிட்டு சென்றுவிட்டது

பின்னே?

இந்தியாவினை பாராட்டிவிட்டால் அங்கே இருக்கும் மசூத் அசார், சையது, தாவுத் இப்ராஹிம் எல்லாம் சும்மா விட்டுவிடுவார்களா?

விண்வெளிக்கே சென்றாலும் பாகிஸ்தானுக்கு திரும்பித்தானே ஆகவேண்டும்

அம்மணியின் பனிமலை சாகசத்தைவிட சாகசமானது இந்த வார்த்தை ஜால விளையாட்டு