பொறுமை காப்பதுதான் பக்தனுக்கும் அவன் பக்திக்கும் அழகு..
தலைவி மலேசியாவின் கோலாலம்பூருக்கு வந்தும் நீ ஏன் சந்திக்கவில்லை என பலர் கேட்டுகொண்டே இருக்கின்றார்கள்
நேற்று விடுமுறையும் கூட என்பதால் ஏகபட்ட கேள்விகள்
என்னதான் உஜ்ஜைனி மகா காளியின் பக்தன் என்றாலும் , தேவியின் சிலையினைத்தான் காளிதாசனால் காணமுடிந்தது
இந்த கம்பனுக்கும் சரஸ்வதி அப்படியே
உண்மையான பக்தனுக்கு தெய்வத்தின் சிலை போதும், தெய்வம் நேரில் வரவேண்டிய அவசியமே இல்லை
பக்தனின் தவத்தை மெய்த்து தெய்வம் நேரில் வரவேண்டுமே தவிர, பக்தன் தேடி ஓடுவது அவன் பக்திக்கும் இழுக்கு
அது அந்த தெய்வத்துக்கும் தீரா களங்கம், சங்கம் அந்த களங்கத்தை தெய்வத்துக்கு கொடுக்க விரும்பவில்லை
ஒரு காலத்தில் அசரீரி ஒலிக்க, வீணையின் நாதம் முழங்க தெய்வமே தேடிவரும்
அதுவரை பொறுமை காப்பதுதான் பக்தனுக்கும் அவன் பக்திக்கும் அழகு..
